2017ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தாக்கல் செய்த போது, ஒரு கட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. 2017 பட்ஜெட் தாக்கல் ஒரு கபட நாடகம், கண் துடைப்பு என்று மகாதீரின் பெயரை குறிப்பிடாமல் ஒருவர் அவ்வாறு கூறியிருக்கிறார் என்று நஜீப் தெரிவித்தார். அதற்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர்களும் அவ்வாறு கூறியுள்ளனர். உண்மையிலேயே இந்த பட்ஜெட் ஒரு கண் துடைப்பா என்று நஜீப் அவையில் இருந்தவர்களை நோக்கி கேட்ட போது, அவையிலிருந்து ஒரே கூச்சலும் குழப்பமும் நிலவின. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்கள் அதிருப்தியை தெரிவிக்கும் நோக்கில் கூச்சலும் குழப்பமும் செய்யத் தொடங்கினர். சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் மூலியா பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதனை யாரும் பொருட்படுத்தவில்லை. எதிர்க்கட்சியினர் தங்களின் ஏமாற்றத்தை தெரிவிக்கும் வகையில் அவையை விட்டு வெளியேறினர். பட்ஜெட் தாக்கல் செய்துகொண்டிருந்த போது, பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் எதிர்க்கட்சி உறுப்பினர்களைச் சுட்டிக் காட்டி பேசியதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சபா நாயகரான டான்ஸ்ரீ பண்டிகார் அமீன் மூலியா அமைதி படுத்தினார். இதனையடுத்து, பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்த பிறகு, நாடாளுமன்ற கதவருகே நின்றுகொண்டு, யார் அந்த முதல் நிலை அதிகாரி என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட போஸ்டரை ஏந்தியவாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததையடுத்து, சிறிது நேரம் அவையில் அமளி துமளி ஏற்பட்டது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்