இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நிச்சயமற்ற, சவால்மிக்க உலகப் பொருளாதாரச் சூழ்நிலையை சமாளிக்கக் கூடிய வகையில் இருக்கும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறியுள்ளார். மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய வரவு - செலவுத் திட்டத்தை தாக்கல் செய்வதில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது. வாழ்க்கைச் செலவினம் குறைப்பு, வீடமைப்பு, இதர முக்கியத்துவம் செலுத்த வேண்டிய இதர பிரச்சினை களையும் அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி, வளர்ச்சியைத் தூண்டும் வகையிலான பட்ஜெட்டை அரசாங்கம் அறிவிக்கும். அதில் தொழில்துறையும் அடங்கும். அரசாங்கம் வழங்கும் ஊக்கத்தின் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரியதொரு பங்கினை ஆற்றக்கூடிய வகையில் வரவு - செலவுத் திட்டம் அமையும் என நேற்று முகநூலில் பதிவேற்றப்பட்ட ஒளிப்பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 1 மலேசியா மக்கள் உதவி வழங்கல் (பிரிம்), இதர பல தொடக்க முயற்சிகள் குறித்து 2017 பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். அரசாங்கக் கொள்கை நேர்மையானதாகவும் சமநிலையானதாகவும் இருப்பதை அரசாங்கம் விரும்புகிறது என்றும் அவர் கூறினார். தமது தலைமைத்துவத்தில் மலேசியா திவால் நிலைக்கு உள்ளாகும் எனக் கூறும் எதிர்க் கட்சியினரை நஜீப் சாடினார். பிரிம் 2012இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அது முதல் ஒவ்வோராண்டும் அந்த உதவித் தொகையை அரசாங்கம் அதிகரிக்கக்கூடிய திறனுடன் இருப்பதை தேசிய முன்னணி அரசாங்கம் நிரூபித்துள்ளது என்றும் நஜீப் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்