மங்கோலிய அழகி அல்தான் துயா ஷாரிபு - மலேசிய சகாப்தத்தில் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம். இவர் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அவருக்கு முறை யான இறுதிச் சடங்கை செய்ய முடியாமல் தவிக்கின்றனர் அவரின் குடும்பத்தினர். என் மகள் எங்களைப் விட்டுப் போனாள். எங்கள் குடும்பத்தின் நிம்மதி, பந்தம் பாசம் அனைத்தும் அவளோடு எங்களுக்கு விடை கொடுத்து விட்டது என்று மனதில் ஆத்திரம் பொங்க, கண்களில் நீர் ததும்ப கூறுகிறார் அல்தான்துயாவின் தந்தை டாக்டர் ஸ்டீவ் ஷாரிபு. மங்கோலியா தலைநகரான உலாம்பாத்தாரில் அவரை சந்தித்து நேர்காணல் நடத்தியுள்ள மலேசிய கினி இணையத் தள ஏடு இவ்விவரங்களை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, மலேசியாவின் இரு போலீஸ் அதிகாரிகளால் வெடிவைத்து, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட என் மகளின் மரணத்திற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அதனால் ஏற்பட்ட துக்கத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று டாக்டர் ஸ்டீவ் தெரிவித்தார். இவரின் மனைவி ஓர் இருதய நோயாளி. யாரிடத்திலும் சவகாசமாகப் பேச முடியாதவர். இவரின் இரு பேரப்பிள்ளைகளோ தாயை இழந்தவர்கள். இவரின் பராமரிப்பில்தான் வாழ்கிறார்கள்.ஒருவனுக்கு 14 வயது. இரு கைகளும் கால்களும் செயலிழந்த நிலையில் தவழ்ந்து செல்கிறான். மற்றொரு பேரப்பிள்ளைக்கு 19 வயது. படுக்கைதான் கதி. அல்தான்துயாவின் தங்கை எப்போதும் வீட்டில்தான் இருக்கிறாள். அவளை வெளியே விட எங்களுக்கு மனம் இல்லை. ஒரு வேளை அவள் விபத்தில் சிக்கினால் எப்படி என்று டாக்டர் ஸ்டீவ் ஒரு கேள்வியை கேட்டு வைக்கிறார். தொடர்ந்து தன் மகள் அல்தான்துயாவைப் பற்றி அவர் பேசுகையில், என் வீட்டில் ஜன்னல்கள் இருக்கின்றன. ஆனால், வெளிச்சம்தான் இல்லை. என் மகளுக்கு இன்னும் முறையான இறுதிச் சடங்கை செய்ய முடியாத நிலையில் நான் இருக்கிறேன். மங்கோலிய பாரம்பரிய முறைப்படி, ஒருவர் இறந்த 49 நாட்களில் இறுதிச் சடங்கு செய்து, நல்லடக்கம் செய்து விட வேண்டும். ஆனால், என் மகளுக்கு 10 ஆண்டுகளாக நான் இதை செய்ய முடியாமல் இருக்கிறேன். என் மகளின் உடல் பாகங்கள் ஒரு சிறிய பெட்டியில் எனக்கு மலேசிய அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டது. தாய்லாந்தில் உள்ள மங்கோலிய தூதரகம் இதை எங்களிடம் ஒப்படைத்தது. அவளின் சில எலும்புத் துண்டுகள் அங்கேயே புதைக்கப்பட்டன. அவளின் அஸ்தி அடங்கும் ஒரு சிமிழ் ஏழாண்டுகளாக அந்த இடுகாட்டில் உள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து அதற்கு என்னால் பணம் கொடுக்க முடியவில்லை. வீட்டிற்கு எடுத்து வந்து விட்டேன். என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்ற நப்பாசையில் மலேசியாவிற்கு அடிக்கடி வந்து போனேன். பணம் விரயமானதுதான் மிஞ்சியது. எங்கள் அடுக்குமாடி வீடு, இருந்த பணம், நகைகள் எல்லாம் கைநழுவி போய் விட்டன. என் மகளுக்கும் நீதி கிடைக்கவில்லை என்று டாக்டர் ஸ்டீவ் கண்ணீர் மல்கக் கூறினார். கடந்த 2006 அக்டோபர் 19-20-ஆம் தேதிகளில் கோலாலம்பூரை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் அல்தான்துயா உடலில் ராணுவ வெடிகுண்டுகள் சுற்றப்பட்டு வெடித்துக் கொல்லப்பட்டாள். அவளின் உடல் சுக்குநூறாக வெடித்துச் சிதறின. வெடி வைப்பதற்கு முன்பு அல்தான்துயா அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளால் இருமுறை தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டார். தலைமை இன்ஸ்பெக்டர் அஜிலா ஹாட்ரி, கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் உமார் இருவரும் இதில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளாவர். 2009-இல் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு, 2013-இல் இருவருக்கும் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் விடுதலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்