img
img

பத்துமலை மேம்பாட்டுக்கு தடையில்லை!
வெள்ளி 21 அக்டோபர் 2016 14:26:40

img

பத்துமலையில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளுக்கு எந்தவொரு தடையுமில்லை. அப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று எம்பிஎஸ், தேவஸ்தானம் நேற்று கூட்டாக அறிவித்தன. பத்துமலை ஆலயத்தின் மேல்குகைக்கு செல்வற்கான நான்காவது படிக்கட்டு உட்பட இதர மேம்பாட்டுப் பணிகளுக்கு முறையாக அனுமதி பெறவில்லை. இதனால் எம்பிஎஸ் எனப்படும் செலாயாங் நகராண்மைக் கழகம் சம்பந்தப்பட்ட மேம்பாட்டு பணிகளுக்கு தடை விதித்துள்ளது என்று ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியிட்டப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பில் செலாயாங் நகராண்மைக் கழகத் தலைவர் சுலிமான் அப்துல் ரஹ்மான் தலைமையிலான குழுவினர் நேற்று பத்துமலைக்கு வருகை தந்தனர். ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் சார்பில் அறங்காவலர்களில் ஒருவரான டத்தோ சிவக்குமார், செயலாளர் சேதுபதி, பொருளாளர் அழகன் உட்பட பலர் அவ்வதிகாரிகளை சந்தித்து பேசினர். இரு தரப்பு பேச்சு வார்த்தைகளுக்கு பின் செலாயாங் நகராண்மைக் கழகத் தலைவர் சுலிமான் செய்தியாளர்களிடம் பேசினார். பத்துமலை ஆலயத்தில் புதிய கட்டுமானப் பணிகள் ஏதும் நடக்கவில்லை. மாறாக இருந்தவை தான் மீண்டும் அழகுபடுத்தி வருகின்றனர். குறிப்பாக புதுப்பிக்கப்படும் நான்காவது படி 1980ஆம் ஆண்டிலேயே கட்டப்பட்டதாகும். தைப்பூச காலங்களில் அது முதலுதவிகளுக்கு பயன்படுத்தப்படும் படியாக இருந்துள்ளது. அப்படியைத் தான் தேவஸ்தானத்தினர் புதுப்பித்து வருகின்றனர். அதே போன்று பெரிய முருகன் சிலை வர்ணம் பூசப்படுகிறது. கீழே உள்ள ஆலயங்களும், மேலே உள்ள ஆலயங்களும் கும்பாபிஷேகத்திற்காக புதுப்பித்து வருகின்றனர். புதிய கட்டடங்கள் கட்டப்பட்டால் தான் லைசென்சுகள் பெற வேண்டும். அழகுபடுத்தும் பணிகளுக்கு விண்ணப்பம் செய்திருந்தாலே போதும். ஒரு சில தவறான தகவல்களால் தான் இதுவொரு பிரச்சினையாக எழுந்துள்ளது. ஆகவே இப்பிரச்சினையை மேலும் பெரிதாக்க வேண்டாம். ஆலயப் பணிகள் அனைத்தும் முறையாக நடைபெறும். அதே வேளையில் கேபள் கார், கலாச்சார மையங்கள் கட்டுவது குறித்து தேவஸ்தானத்தினர் மீண்டும் விண்ணப்பம் செய்தால் அதை மறுபரிசீலனை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என்று சுலிமான் கூறினார். இதனிடையே பத்துமலையில் நீர் ஊற்று உட்பட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்ற வதந்தி தான் இப்பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று அறங்காவலர் டத்தோ ந. சிவக்குமார் கூறினார். சுற்றுப்பயணிகளும், மக்களும் அதிகம் வரும் இடமாக பத்துமலை விளங்குகிறது. அவர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்ற நோக்கில் தேவஸ்தானம் இதுபோன்ற மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஒரு சிலர் இவ்விவகாரங்களை வைத்து தேவஸ்தானத்திற்கு எதிராக பிரச்சினைகளை தூண்டி விடுகின்றனர். நான்காவது படி கட்டுவதால் மக்கள் தான் பயன் பெறவுள்ளனர். அதுவும் இப்படிக் கட்டுகள் ஏற்கெனவே அங்கு இருந்தவையாகும். 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது நமது சமயத்திலேயே உள்ளது. இதனால் ஆலயங்களை புதுப்பிப்பதில் எந்தவொரு தவறும் இல்லை.தவறான தவகல்கள், வதந்திகளால் தான் இவ்வளவு பிரச்சினை எழுந்துள்ளது என்று எம்பிஎஸ் தலைவரே ஒப்புக் கொண்டார். ஆகவே பத்துமலையில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் எந்தவொரு பிரச்சினையும் இன்றி தொடர்ந்து நடைபெறும் என்று சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img