நாட்டின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார். பிரதமர் தாக்கல் செய்யவிருக்கும் இந்த பட்ஜெட் சாமானிய மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத திட்டமாக விளங்கலாம் என்று ஆரூடம் கூறப்பட்ட போதிலும், உலகளாவிய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த நிலையில் 2017 வரவு செலவுத்திட்டம் அமையலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 2017 பட்ஜெட் தயாரிப்பு ஏற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதை கண்டறியும் பொருட்டு நேற்று கருவூலத்திற்கு சென்றிருந்த பிரதமர், மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும் வகையிலேயே இந்த முறை வரவு செலவுத்திட்டம் அமைந்து இருக்கும் என்று வர்ணித்துள்ளார். நிர்ணயம் இல்லாத, சவால் நிறைந்த உலகளாவிய பொருளாதார சூழல் நிலவிய போதிலும் தாமும் தமது அமைச்சரவையும் மக்களின் நலனில் மிகுந்த கவனம் செலுத்தியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, இந்த பட்ஜெட்டில் கல்வித்திட்டங்களுக்கு அதீத முக்கியத்துவம் அளித்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு தாம் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் 2012 ஆம் ஆண்டு முதல் மலேசிய கல்வி வரலாற்றில் இடம் பெறும் வகையில் தொடக்கப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகளுக்கான பள்ளி கட்டணத்தை அகற்றியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார், இந்நிலையில் குறைந்த வருமானம் பெறுகின்றவர்கள் நன்மை அடையும் பொருட்டு பிரிம் உதவித் தொகையில் 200 வெள்ளி அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அடுத்த ஆண்டு 660 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த 2016 பட்ஜெட்டில் 3 ஆயிரம் வெள்ளி, அதற்கு கீழ் வருமானம் பெறுகின்றவர்களுக்கான பிரிம் தொகை 950 வெள்ளியிலிருந்து 1000 வெள்ளியாக உயர்த்தப்பட்டது. 2012 ஆம் ஆண்டு 500 வெள்ளியாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிரிம் தொகை சாமானிய மக்களின் வாழ்க்கைச் செலவினத்தை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. அதேபோன்று 3,001 வெள்ளிக்கும் 4,000 வெள்ளிக்கும் இடைப்பட்ட நிலையில் வருமானம் பெறுகின்றவர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 800 வெள்ளி பிரிம் உதவித் தொகை 900 வெள்ளியாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆர்.எச்.பி. தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட 6 விழுக்காடு ஜி.எஸ்.டி. பொருள் சேவை வரியில் மாற்றம் இருக்காது. மாறாக இந்த விகிதம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அரசாங்கத்தில் பணியாற்றும் 11 லட்சத்திற்கும் அதிகமான பொதுச் சேவை ஊழியர்களுக்கு 2 மாத போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று அதன் தொழிற்சங்கமான கியூபெக்ஸ் வலியுறுத்திய போதிலும் வழக்கம் போலவே அரை மாத போனஸ் தொகை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டு காலமாக கலால் வரி உயர்த்தப்படாமல் இருக்கும் மதுபான வகைகளுக்கு இம்முறை கலால் வரி உயர்த்தப்படும் ஆனால் மிகச்சிறிய அளவிலேயே அதன் வரி உயர்த்தும் சாத்தியம் ஏற்படலாம் அல்லது தவிர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பி40 என்று அழைக்கப்படும் 3,855 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறுகின்ற தரப்பினருக்கு பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகளை வழங்க இந்த பட்ஜெட் வகை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படும். எம்40 என்று வகைப்படுத்தப்பட்ட 3,860 வெள்ளிக்கும் 8,319 வெள்ளிக்கும் இடைப்பட்ட வருமானம் பெறுகின்றவர்களுக்கு முதல் முறையாக வாங்கப்படும் வீட்டிற்கான வங்கிக் கடன் உதவி அதிகமாக கிடைப்பதற்கு வகை செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மாவு, சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கான உதவித்தொகை அகற்றப்படுவதால் அவற்றின் விலை அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. தனிநபருக்கான வருமான வரி விலக்களிப்பு தொகை உயர்த்தப்படலாம். இதற்கு மேலாக அண்மையில் மஇகா பேராளர் மாநாட்டில் பிரதமர் அறிவித்த இந்தியர் களுக்கான சிறப்புத் திட்ட வரைவுகள் ( புளுபிரிண்ட்) மீதான அம்சங்களை இந்த பட்ஜெட்டில் பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியர்களை மேம்படுத்துவதற்கான செயல்திட்டங்கள், அதற்கான ஒதுக்கீடுகள் முழு விவரங்களை பிரதமர் இன்று வெளியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்