கோஸ்டாரிகா பகுதியில் சமீபத்தில் புதிய பச்சை நிறத்தில் உள்ள கண்ணாடி தவளை இனத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதே பகுதியில் 14 விதமான கண்ணாடி தவளைகள் வசிக்கின்றன. இவற்றின் வயிற்றுக்கு அடிப்பகுதி மென்மையாக இருப்பதால், உள்ளே உள்ள அங்கங்கள் அப்படியே தெரியும். அதனால்தான் அவற்றுக்கு கண்ணாடி தவளை என்று பெயர்