ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளுடன், புத்தகங்களை படிக்கும் அல்லது ஜிக்சா புதிர்களை தீர்க்கும் குழந்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் குறைவாக இருக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொலைக்காட்சியை குறைந்த அளவில் பார்க்கும் இளம் குழந்தைகளின் ஆக்கபூர்வமான சிந்தனைகள் அதிகரிப்பதில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் உள்ள இங்கிலாந்து பல்கலைக்கழகம், மூன்று வயதுடைய 60 குழந்தைகளிடையே நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், 15 நிமிடங்களுக்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான சிந்தனை படைப்புகள் தற்காலிகமாக குறைந்து வருவது கண்டறியப்பட்டது. ஏனெனில் தொலைக்காட்சியை பார்ப்பதால் குழந்தைகளின் ஆக்கபூர்வமான சிந்தனைகளில் உடனடியாக பாதிப்பு ஏற்படுவதை நாங்கள் ஆராய்ச்சியில் முழுமையாக கண்டறிந்துள்ளோம் என்று உளவியல் விரி விரையாளருமான டாக்டர் சாரா ரோஸ் தெரிவித்துள்ளார் குறைந்த அளவு தொலைக்காட்சியை பார்த்து, படிப்பிலும், புதிர் விளையாட்டுகள் விளையாடும் குழந்தைகளின் ஆக்கபூர்வமான சிந்தனை படைப்பாற்றல்கள் மற்றும் கருத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். குறைந்த அளவு தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளுக்கும் படைப்பாற்றல் திறன் பெருகிக்கொண்டே இருக்கும், அதனால் அவர்களின் கருத்துகள் மிக தெளிவாகவும் துள்ளியமாகவும் இருக்கும். அதிகளவு தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகளின் படைப்பாற்றல் குறைவதால் அவர்களின் அறிவு சார்ந்த வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்