கோலாலம்பூர்,
இயற்கைக்கும் நமக்கு உணவ ளிக்கும் விவசாயிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் திருநாளே பொங்கல் பண்டிகை. பயிர்களின் வளர்ச்சிக்கு மழையைத் தந்து வளம்தரும் சூரிய பகவானுக்கு உழைப்பின் முதல் அறுவடையை பொங்கல் வைத்து படைத்து நன்றி கூறி வழிபட்டு வருவது நமது மரபாகும்.
பொங்கல் விழா நான்கு நாட்களுக்கு அதாவது போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் (கன்னி) பொங்கல் என வெகு சிறப்பாகக் கொண்டாடப் படுவதுண்டு. அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள் இடம்பெறும். இவ்வருடம் சிறப்புமிகு தை மாதத்தின் முதல் நாளில் கொண்டா டப்படும் இந்த தைப்பொங்கலை ஜனவரி 15ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாம் கொண்டாட விருக்கிறோம்.
சூரிய பொங்கல் வைக்க உகந்த நேரம் மலேசிய நேரப்படி காலை 7.30 மணி முதல் 10.25 மணி வரையாகும். அன்றைய தினம் பலருக்கு வேலை நேர மாக இருப்பதால் மாலையில் பொங்கல் வைப்பவர்கள் மாலை 6 மணி முதல் 7.25 மணிக்குள் பொங்கல் வைக்கலாம்.உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றான் மகாகவி பாரதி. எனவே, இயற்கைக்கு நன்றி கூறும் அதே வேளையில், நம் உறவினர் களோடும் சுற்றத்தார்களுடனும் மகிழ்ச்சியாகவும் நல் சிந்தனையோடும் இந்த திருநாளைக் கொண்டாடுவோம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்