வீடமைப்புக் கட்டுமானம், சுகாதார சேவைகள் போன்ற வியாபாரங்களில் பிரபலமான சன்வே குழுமத்தின் தீபாவளி விருந்து அண்மையில் சன்வே தங்கும் விடுதி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். ஷான் காப்பகம், குழந்தைகள் நலன் சமூகம், ஜோசப் காப்பகம், ராமகிருஷ்ணா ஆசிரமத்திலிருந்து சுமார் 120 குழந்தைகள் இந்த விருந்து நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பினாங்கு துணை முதல்வர் தீபாவளி அன்பளிப்புகளை எடுத்து வழங்கினார். பிறகு, குழந்தைகளுக்கு இரவு உணவும் பலகாரங்களும் வழங்கப்பட்டன. சன்வே குழுமத்தின் சமூக நலப் பணிகளில் ஒன்றாக விளங்கும் இந்நிகழ்விற்காக சுமார் 40 தன்னார்வாளர்கள் இணைந்து விழாவில் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டனர். மேலும் இக்குழந்தைகளுக்காக நாடளவில் நிதி திரட்டும் நிகழ்விலும் கலந்து முழு ஒத்துழைப்பை வழங்கினர் என சன்வே பினாங்கு மாநில நிர்வாகி க.அகிலா தெரிவித்தார். குழந்தைகளை மேலும் மகிழ்விக்க நவீனா ஆர்ட்ஸ் குழுவின் நடனமும் மேஜிக் கண்காட்சியும் நடத்தப்பட்டன.
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்