மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சாபா நீரளிப்புத் துறை விவகாரம் தொடர்பில் புதிதாக 19 பேரையும் ரிம2.4மில்லியன் ரொக்கத்தையும் கைப்பற்றியிருப்பதாக சைனா பிரஸ் அறிவித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கைதும் சொத்துப் பறிமுதலும் நடந்திருப்பதாக அந்த நாளேடு கூறிற்று. அடையாளம் தெரிவிக்கப்படாத வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கும் சைனா பிரஸ், கைதானவர்களில் சிலர் நீரளிப்புத்துறை வழங்கிய குத்தகைகளிலிருந்து 27 முதல் 30 விழுக் காடு வரை கையூட்டு பெற்று வந்ததாகக் கூறியது. கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் (நடவடிக்கை) அஸாம் பாகி உறுதிப்படுதினார் என்றும் அந்த நாளேடு தெரிவித்தது. ஆனால்,விசாரணை நடை பெறுவதால்அவர் மேல்விவரங்களை வெளியிடவில்லை. இதுவரை நடந்துள்ள விசாரணைகளில், அவ்விவகாரத்தில் தேசிய- நிலை அரசியல் பெரும் புள்ளி கள் சம்பந்தப்பட்டிருப்பதற்காக தெரியவில்லை என்று அஸாம் குறிப்பிட்டார். அது ஒரு சாதாரண விசாரணை தான் என்றுரைத்த அவர், அதை அரசியல் விவகாரமாக மாற்றிவிடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்