img
img

செடிக், சீட் அமைப்புகளை சீண்டாதீர்!
வியாழன் 20 அக்டோபர் 2016 08:57:57

img

கூன் விழுந்த சமுதாயத்தை பொருளாதார ரீதியில் நிமிர்த்தப் போவதாக மைக்கா ஹோல்டிங்ஸை தொடங்கிய மஇகா, இந்திய சமுதாயத்திற்கு பட்டை நாமம் போட்டது போதும். எனவே பிரதமர்துறையின் கீழ் செயல்பட்டு வரும் செடிக் மற்றும் சீட் அமைப்புகளையும் ம.இ.கா சீண்டக் கூடாது என்று ஈப்போ பாராட் ஜ.செ.க. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய மக்களின் சமுதாய,பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கம் செடிக் மற்றும் சீட் போன்ற அமைப்புகளின் வழி நிதி ஒதுக்கீடு செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இது குறித்து கருத்துரைத்த ம.இ.காவின் தேசிய துணைத் தலைவரும் துணை அமைச்சருமான தேவமணி இவ்விரு அமைப்புகளும் சரியான முறையில் செயல்படவில்லை என்று பேசியிருந்தார். மேலும் இவை ம.இ.காவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எதிர்க்கட்சியினருக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும், தாம் அது குறித்து பல புகார்கள் பெற்றுள்ளதாகவும் கூறியிருந்தார். இன்னொரு பேராளர் இது போன்ற நிதி ஒதுக்கீடு ம.இ.கா வழியாகத்தான் மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்று கூறியுள்ளார். இது போன்ற உண்மைக்குப் புறம்பான , அரசியல் நோக்கம் கொண்ட கருத்துகளை ம.இ.கா மாநாட்டில் வெளிக்கொணரும் போது, ம.இ.கா மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையை மேலும் வலுவடையச் செய்யும் என்பதை அந்த பேராளர்கள் நினைவில் கொள்ளுதல் வேண்டும் என்று குலசேகரன் வலியுறுத்தினார். இந்த இரு அமைப்புகளும் பிரதமர்துறையின் கீழ் வைக்கப்பட்டதன் முக்கிய காரணமே ம.இ.காவின் இயலாமைதான் என்பதை மக்களும் உணர்ந்துள்ளனர் , அரசாங்கமும் அறிந்துள்ளது. இந்திய மக்களின் நலனுக்காக எவ்வளவோ ஒதுக்கீடுகள் கடந்த காலங்களில் ம.இ.கா வழியாகத்தான் கொடுக்கப்பட்டு வந்துள்ளன. அது இந்திய மக்களுக்குப் போய்ச் சேராததால் அரசாங்கமே செடிக் மற்றும் சீட் போன்ற அமைப்புகளை அமைத்து ஒதுக்கீடுகள் மக்களுக்கு நேரடியாகப் போய்ச் சேர வழி வகுத்தது. ம.இ.கா ஹோல்டிங்ஸின் சொத்துடைமைத் திட்டம், டெலிகொம்ஸ் பங்குகள், ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம் அமைக்க அரசாங்கம் கொடுத்த மானியங்கள் மக்களிடம் போய்ச் சேர்ந்ததா என்பதை துணைத் தலைவர் சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை தான் வியர்வை சிந்தி கட்டியதாக இப்பொழுது முன்னாள் தலைவர் ஒருவர் கூறிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்டுக் கொண்டு இப்போதைய ம.இ.கா தலைவர்கள் வாய்மூடி மௌனிகளாக இருக்கிறார்கள். கடந்த 2014 இல் துணை அமைச்சர் ஒருவருக்கு அவர் சார்ந்த கல்வி நிறுவனத்திற்கு பாலர் பள்ளிகள் கட்டுவதற்காக வெ. 27 மில்லியன் ஒதுக்கப்பட்டதே அதன் கணக்கு விவரங்கள் என்னவாயிற்று? இதுவரையில் சம்பந்தப்பட்ட துணை அமைச்சர் அது குறித்து ஏன் பேசவில்லை? இந்திய மேம்பாட்டுக்காக ச. சாமிவேலு தலைமையின் கீழ் ஒரு குழுவும் , பழனிவேல் தலைமையின் கீழ் ஒரு குழுவும் திட்டங்கள் தீட்டினார்கள், ஆனால் அவை ஒன்றுமே செயலாக்கம் காணவில்லை என்று இன்றைய தேசியத் தலைவரே ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில், ஏதோ அரசாங்கம் கொடுக்கும் சொற்ப தொகையைக் கொண்டு சீரிய திட்டங்கள் வகுத்து செயலாற்றிக் கொண்டுவரும் செடிக் மற்றும் சீட் போன்ற அமைப்புகளின் மேல் குறை காண்பது ம.இ.கா இந்திய சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும். செடிக்கும் சீட்டும் அவற்றின் சேவைகளைச் சிறப்பாக செய்து கொண்டு வருகின்றன என்பதற்கு அவற்றின் வெளிப்படையான செயல்பாடுகளே சாட்சியங்களாக விளங்குகின்றன. எத்தனையோ அரசு சாரா இயக்கங்கள் செடிக் வழி உதவி பெற்று மக்கள் நலனுக்காக பல திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகின்றன. ஆக்கபூர்வமான சிந்தனையைக் கொண்டு இந்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தால், ம.இ.காவினர் கீழ்க் கண்ட கோரிக்கைகளை தைரியமாக பிரதமர் முன் வைக்க வேண்டும்: 1.கடந்த ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டின் மொத்த ஒதுக்கீடு 250 பில்லியன் வெள்ளி. அதில் இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்டது 150 மில்லியன் வெள்ளி. இது மொத்த பட்ஜெட்டில் 0.0006 % ஆகும். மலேசிய மக்கள் தொகையில் நாம் 7% என்று எடுத்துக் கொண்டாலும் ஒரு 5 விழுக்காடாகிலும் (12.5 பில்லியன் வெள்ளி) நமக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். இது குறித்து நீங்கள் கருத்தொன்றும் கூறவில்லையே ? ஏன்? 2.ம.இ.காவின் தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்பிரமணியம் கடந்த 9 வருடகாலமாக அமைச்சரவையில் இருக்கிறார். அவர் அரசாங்கத் துறையில் இந்தியர்களின் எண்ணிக்கையை 7 விழுக்காடாக உயர்த்துவேன் என்று கூறியிருந்தார். அந்த எண்ணிக்கையை உயர்த்திவிட்டாரா? இது குறித்து நஜீப்பிடம் கேட்டிருக்கலாமே ? 3.செடிக்கிற்கான நிதி ஒதுக்கீடு வெ.100 மில்லியனிலிருந்து வெ. 60 மில்லியனாக குறைக்கப்பட்டதே, அது உயர்த்தப்பட வேண்டுமே தவிர குறைக்கப்படக்கூடாது என்று பிரதமரிடம் கேட்டிருக்கலாமே ? இவ்வளவு முக்கிய வேலைகள் இருந்தும் இவற்றின் மீது கவனம் செலுத்தாமல் மேடையில் பேசி பேராளர்களைக் கவரவேண்டும் என்பதற்காக அர்த்தமற்ற பேச்சுகள் பேசுவதை மஇகா தலைமைத்துவம் தவிர்க்க வேண்டும் என்று குலசேகரன் வலியுறுத்தினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img