“தமிழ் படித்து சாக வேண்டும்; என் சாம்பலிலும் தமிழ் மணம் வீச வேண்டும்” எனும் சிந்தனை நமது சமூகத்தி டமிருந்து விடுபட்டு வருவதாகவே உணர முடிகின்றது. கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்தில் போதிக்கும் திட்டத்தால் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வு கண்டு 2009 -இல் சுமார் 110,000 மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் பயின்று வந்தனர்.
எனினும், 2018-இல் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 80,000 மட்டுமே. இரட்டை மொழித் திட்டத்தை (டி.எல்.பி.) தமிழ்ப்பள்ளிகளுக்கு சாதகமாக அமைய விடாமல் தடுக்கும் இயக்கத்தால் மாணவர்க ளின் எண்ணிக்கை மேலும் சரிவடையும் என்பதை மறுக்க முடியாது.
தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி அடைவு நிலைக்கு எவ்விதமான எதிர்மறைத் தாக்கமும் இல்லை என்பதை உணர்வுப்பூர்வமாகக் கூறுகின்றனர் ஜொகூர், பாசீர் கூடாங் பகுதியில் வசித்து வரும் சுப்ரம ணியம் பழனிச்சாமி - தமிழ்ச் செல்வி ஆறுமுகம் தம்பதியர்.
சுப்பிரமணியம் பழனிசாமி லாயாங்-லாயாங் புக்கிட் பாடாக் தோட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ்ச்செல்வி ஆறுமுகம் உலுத்திராம், கிம் லோங் தோட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தங்களின் கல்விப் பின்னணியே தங்கள் மூன்று வாரிசுகளையும் தமிழ்ப்பள்ளிக்கே அனுப்பும் முடிவினை ஏற்படுத்தி யதாகக் கூறுகின்றனர் முன்னாள் ஆசிரியர்களான இத்தம்பதியர்.
இவர்களின் மூத்த வாரிசு திவ்யா சுப்பிரமணியம், ஜொகூர், மாசாய் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு கல்வியைத் தொடங்கினார். பிறகு, படிவம் ஒன்று முதல் உயர்கல்வி வரை பொந்தியான் மாரா இளநிலை அறி வியல் கல்லூரியில் (MRSM, Pontian) படிப்பை முடித்து, ஈப்போ குவெஸ்ட் அனைத்துலக பல்கலைக்க ழகத்தில் (Quest University) மருத்துவத் துறையில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது திவ்யா சுப்ரமணியம் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இரண்டாவது வாரிசு விக்னேஸ்வரன் சுப்ரமணியம், பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி, எஸ்.பி.எம். தேர்விற்குப் பின்னர் வாகனத்துறையில் உயர்கல்வி பெற்றுள்ளார்.
இவர்களின் மூன்றாவது வாரிசு சங்கீதா சுப்ரமணியம். இவர் பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளியில் பயின்று, நூசா டாமாய் இடைநிலைப்பள்ளியில் கல்வியை முடித்து, தற்போது ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் (AIMST University) மருத்துவத்துறையில் பயின்று வருகிறார்.
தந்தை சுப்ரமணியம் பழனிச்சாமி வர்த்தகத் துறையில் ஈடுபட்டு வருவதோடு சமூக நடவடிக்கைகளிலும் பங்கெடுத்து வரும் நிலையில், தமிழ்ப்பள்ளிகளில் கல்வியைத் தொடங்கியதால்தான் தனது பிள்ளைகள் கல்வி அடைவு நிலையில் சாதனை படைத்துள்ளதாக பெருமையாகக் கூறுகிறார்.
வாழ்வியல் தேவைகளுக்கு ஏற்ற மாற்றங்களை தமிழ்ப்பள்ளிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் பள்ளிகள் மட்டுமே பெயரளவில் எஞ்சியிருக்கும் என்பதைப் போராடுகின்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்