img
img

பத்துமலையில் புதிய படிக்கட்டுகளுக்கு தடைவிதிப்பு!
வியாழன் 20 அக்டோபர் 2016 08:56:36

img

அடுத்தாண்டு தைப்பூசத்தை எதிர்கொள்ளும் வகையில், பத்துமலை திருத்தலத்தில் ஆலயத் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இத்திருப்பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதி யைப் பெற்றிருக்காததைத் தொடர்ந்து, செலாயாங் நகராண்மைக் கழகம் ஆலய நிர்வாகத்திற்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. பத்துமலை ஆலயத்திற்கு எதிராக, 1976 ஆம் ஆண்டு சாலை மற்றும் கட்டட வடிகால் நீர்ப்பாசன சட்டத்தின் கீழ் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக செலாயாங் நகராண்மைக் கழகத்தின் பொது உறவு இயக்குனரான முகமது ஸின் மாசோட் தெரிவித்தார். நகராண்மைக் கழகத்தின் அனுமதியின்றி எந்த தரப்பினரும் எந்த கட்டடத்தையும் மறுசீரமைக்கக் கூடாது என அவர் தெரிவித்தார். எனினும், இதுவரை எந்த அபராதமும் இதுவரை விதிக்கப்படவில்லை என்றாலும், பத்து மலைத் திருத்தலத்தின் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்தார். பத்துமலை திருத்தலத்தை டான்ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையிலான தேவஸ்தானப் பொறுப்பாளர்கள் அழகு படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் வேளையில் அதற்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியாகவே செலாயாங் நகராண்மைக்கழகம் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, பத்துமலைத் திருத்தலத்தில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டடத்திற்கும் அதற்கான வரைபடம், அந்த வரைபடத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி கடிதம் முதலியவற்றை கோரி, அண்மைய காலமாக தேவஸ்தானத்திற்கு செலாயாங் நகராண்மைக்கழகம் பெரும் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் சொல்லப் படுகிறது. அதன் அடிப்படையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றொரு படிக்கட்டு நிர்மாணிப்பு பணிக்கு அது தடைவிதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img