கோலாலம்பூர்,
தமிழைவிட இனிமையான பழமையான மொழி இல்லை; திருக்குறளை விட மேலான நூல் இல்லை; தாயைவிட சிறந்த உறவு இல்லை; தமிழர்க்கு ஈடான இனம் இல்லை; இது இன்றைய தமிழர்க்குப் புரியவில்லை எனப் புலம்பும் நிலைக்கு நமது சமூகம் வந்து விட்டதே என்பதுதான் இன்றைய சவாலாகும். தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்பட்டிருந்தாலும் நிவாரணம்
தேடுவதற்கான களம் அமைக்கப்படவில்லை என்பதே நமது இன்றைய சிக்கலாகும்.
தமிழ்ப்பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையால் இதுவரை ஏறக்குறைய 1200க்கும் குறையாத ஆசிரியர் வேலை வாய்ப்புகளை சமூகம் இழந்துள்ளது. இனியும் தொடர்ந்து இழக்கும் அபாயம் உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் ஆராயப்பட வேண்டும். தாங்கள் கற்ற தமிழ்ப்பள்ளி கல்வியே பிள்ளைகளுக்கு ஏற்றது. எனவே முடிவெடுத்த முனியாண்டி புத்துரன் - பரமேஸ்வரி மாரியப்பன் தம்பதியர் தங்களின் இரண்டு பெண் பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியைத் தமிழ்ப்பள்ளியாலேயே தொடங்கி தங்களது சமூகக் கடப்பாட்டினை நிறைவேற்றியுள்ளனர்.
ஜொகூர் பார்வைக் கல்வி கழகத்தின் துணைத்தலைவராகச் சமூகச் சேவையாற்றி வரும் முனியாண்டி புத்துரன், தன் மூத்த புதல்வி சுலோச்சனா முனியாண்டியை பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளியில் (குஒஓகூ கச்ண்டிணூ எதஞீச்ணஞ்) சேர்த்தார். யூபிஎஸ்ஆர் தேர்வில் தேர்ச்சி பெற்று பாசீர் பூத்தே இடைநிலைப்பள்ளியில் (குஓ கச்ண்டிணூ கதணாடிட) எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெற்று படிவம் 6க்கான உயர்கல்வியை டத்தோ பெங்காவா தீமூர் (குஓ கஞுணஞ்ஞ்ச்தீச் கூடிட்தணூ) பள்ளியில் முடித்தார். தனது பட்டயக் கல்வியைச் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் (க்ககுஐ) முடித்துள்ளார். தற்போது, தான் கல்வி கற்ற பாசீர் பூத்தே இடைநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
முனியாண்டி புத்துரன்- பரமேஸ்வரி மாரியப்பன் தம்பதியரின் இரண்டாவது புதல்வி நிஷா முனியாண்டி அக்காளை போன்றே பாசீர்கூடாங் தமிழ்ப்பள்ளியிலும் பாசீர் பூத்தே இடைநிலைப் பள்ளியிலும் டத்தோ பெங்காவா தீமூர் உயர்நிலைப் பள்ளியில் எஸ்.டி.பி.எம். தேர்வினை முடித்துவிட்டு, அதே சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் பட்டயக் கல்வியை மேற்கொண்டு வருகின்றார்.
தங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி தடை படாமல் இருந்தமைக்குத் தமிழ்ப்பள்ளியில் விதையிடப்பட்ட கல்வி வாய்ப்புகளே காரணம் என்பதை ஒளிவுமறைவில்லாமல் கூறுகின்றனர் முனியாண்டி புத்துரன்- பரமேஸ்வரி மாரியப்பன் தம்பதியர். தமிழ்ப்பள்ளிகளில் பிள்ளைகளின் கல்வியைத் தொடங்குவதை சமூகக் கடமையாகவே ஒவ்வோர் இந்தியரும் கருத வேண்டும் என்பதே நியாயமாகும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 22.12.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்