திங்கள் 09, டிசம்பர் 2019  
img
img

தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க தமிழ்ப்பள்ளிகளில் கற்கவைத்த இராமன் முத்து - புவனேஸ்வரி அரசப்பன் தம்பதியர்
வெள்ளி 21 டிசம்பர் 2018 16:52:55

img

“மெய்யடியார் சபை நடுவே எந்தை உனைப்பாடி மகிழ்ந்தின்புறவே வைத்தருளிச் செந்தமிழின் வளர்க்கின்றாய்” (4802) எனப்பாடி இறையன்பைப் பெற்று ஜீவகாருணியத்தை உலகிற்கு உணர்த்திய வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், தமிழ்மொழியைப் பித்ரு மொழியாக அடையாளம் கண்டதை நமது தற்போதைய  சமூகம் மறந்து விட்டிருப்பது சமூக வீழ்ச்சிக்கே அடித்தளம் என்பதை உடனடியாக உணர வேண்டும்.

மலேசியாவில் வாழும் இந்தியர்கள் வாழ்வியல் தேவை களை நிறைவு செய்யும் போராட்டத்தில் தாய்மொழிக் கல்வியைக் காவு கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகக் கருதுகின்றனர் கடாரம் என்றழைக்கப்பட்ட கெடா மாநிலத்தின் சுங்கைப்பட்டாணி நகரில் வசித்து வரும் இராமன் முத்து, இவரின் துணைவியார் புவனேஸ்வரி அரசப்பன். தங்களின் நான்கு பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியைத் தமிழ்ப்பள்ளியிலேயே தொடங்குவதற்கு முதன்மைக் காரணம் தமிழ்மொழியை அடுத்த தலைமுறை இழந்தால் நமது அடையாளம் சிதைக்கப்படும் என்பதேயாகும் எனத் தெளிவாகக் கூறுகின்றனர். 

இராமன் முத்து - புவனேஸ்வரி அரசப்பன் தம்பதியரின் மூத்த வாரிசு லாவண்யா இராமன். இவர் கெடா மாநிலத்தின் லூனாஸில் அமைந்திருக்கும் வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளியில்  தனது கல்வியைத் தொடங்கினார். இடைநிலைப்பள்ளிக் கல்விக்குப் பிறகு தற்போது செடாயா அனைத்து லகப் பல்கலைக்கழகக் கல்லூரியில்  விநியோக நிர்வாகத்துறையில் பயின்று வருகிறார்.

அடுத்தவர் லாவண்யா இராமன். இவரும் வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளியிலேயே கல்வியைத் தொடங்கியவர். எஸ்.பி.எம். தேர்விற்குப் பின்னர் தற்போது சரவா, கூச்சிங்கில் செயல்பட்டு வரும் செடாயா அனைத்துலகப் பல்கலைக்கழகக் கல்லூரியில் அறிவியல் துறை ஆயத்தக் கல்வியைப் பயின்று வருகின்றார்.

இராமன் முத்து - புவனேஸ்வரி அரசப்பன் தம்பதியரின் மூன்றாவது வாரிசு பிரதீபன் இராமன். இவர் தைப்பிங் நகரில் அமைந்திருக்கும் செயிண்ட் திரேசா தமிழ்ப்பள்ளியில் கல்விப் பயணத்தைத் தொடக்கினார். யூ.பி.எஸ்.ஆர், பிடி3 தேர்வுகளில் சிறந்த தேர்ச்சியினைப் பெற்று எஸ்.பி.எம் தேர்வு முடிவு களுக்காகக் காத்திருக்கின்றார். வீட்டின் கடைக்குட்டி மோவின்ராஜ் இராமன். இவரும் தன் அண்ணன் கல்வியைத் தொடங்கிய பேரா, செயிண்ட் திரேசா தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கி பிடி3 தேர்வில் சிறந்த அடைவு நிலையைப் பெற்றிருக்கின்றார்.

மலேசிய இந்தியர்களிடையே, பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் பதியும் எண்ணிக்கைக் குறைந்து வரும் நிலையில் தனது நான்கு பிள்ளைகளும் தமிழ்ப்பள்ளியிலேயே கல்வியைத் தொடங்குமாறு முடிவு எடுத்ததற்கு தான் தமிழ்மொழியின் மேல் கொண்டிருக்கும் பற்று மட்டுமல்லாமல் தனது தாய் மொழியாக இருப்பதுவுமே காரணம் என்பதை வலியுறுத்திய இராமன் முத்து, தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரும் தமிழ்க்கல்வியைப் பெறுவது தார்மீகப் பொறுப்பு என்பதையும் தெரிவித்துள்ளார். தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கிய குடும்பங்களில் மகிழ்ச்சியே  மேலோங்கும் என்பதை இராமன் முத்து - புவனேஸ்வரி அரசப்பன் குடும்பத்தினர் நிரூபித்துள்ளனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய நாட்டுத் தொழிலாளர்களைச் சேர்ப்பதில் அதிகார துஷ்பிரயோகம்,ஊழல், சுரண்டல்! எஸ்.பி.ஆர்.எம். அம்பலம்

நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார

மேலும்
img
விடுதலைப் புலிகள் தொடர்பாக 12 பேர் கைதா? லண்டன் தமிழர்கள் கண்டனக் குரல்!

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12

மேலும்
img
கெராக்கான் மீதிலான குற்றச்சாட்டு சுத்த அபத்தம்

கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று

மேலும்
img
செரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்?

அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு

மேலும்
img
102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.

1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img