நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2017 பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள், சேவை வரி மேலும் 2 விழுக்காடு உயர்த்தப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. தற்போது 6 விழுக்காடாக இருந்து வரும் ஜி.எஸ்.டி. வரி, 8 விழுக்காடாக உயர்த்தப்படும் என்று கூறப்படும் வேளையில் அது வெறும் வதந்தியே என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஜொஹாரி அப்துல் கனி நேற்று தெரிவித்துள்ளார். உண்மையிலே அத்தகைய உயர்வு எதுவும் இல்லை. அரசாங்கம் ஜி.எஸ்.டி. வரியை மேலும் 2 விழுக்காடாக உயர்த்தப் போவதாக யாரோ கிளப்பிவிட்டுள்ள வதந்தியாக அது இருக்கலாம் என்று அவர் சொன்னார். நேற்று இங்கு 2016 ஏழாவது உலக முஸ்லிம் வர்த்தக கண்காட்சியை தொடக்கி வைத்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஜொஹாரி மேற்கண்டவாறு கூறினார். ஜி.எஸ்.டி. வரி கடந்த 2015 ஏப்ரல் முதல் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட 6 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரிதான் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்