சிலாங்கூர் மாநிலத்தில் சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்ற மணிசேகரன் நாகூரான், வசுந்துரா இராஜ கோபால் தம்ப தியர் தங்களது மூன்று செல்வங்களின் பாரம்பரியமும், சமயமும் துளியளவுகூட சேதாரமாகாமல் இருக்க வேண்டும் எனும் ஒரே இலக்கில் கவ னமாக இருந்து தாங்கள் பெற்ற இன்பத்தைப் பிள்ளைகளும் பெற வேண்டும் என்பதால் தமிழ்ப்பள்ளியிலேயே கல்வியைத் தொடங்கி சமூகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
சமூக ஆர்வலரும் சொந்த தொழில் செய்து வருபவருமான மணிசேகரன் நாகூரான் தன் மூத்த பிள்ளை விநோதினி மணிசேகரன் ரவாங் தமிழ்ப்பள்ளி யில் (SJKT Rawang) கல்வியைத் தொடங்குவதற்கான வாய்ப்பினை வழங்கினார். இடைநிலைப் பள்ளியில் கல்வியை முடித்த பின்னர் ஷா ஆலமில் அமைந்திருக்கும் நிர்வாக அறிவியல் பல்கலைக் கழகத்தில் (MSU) தங்கும் விடுதி நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.
மணிசேகரன் - வசுந்துரா இராஜகோபால் தம்பதியரின் இரண்டாவது வாரிசு விஜயஸ்ரீ மணிசேகரன், ரவாங் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கி கோலாலம்பூர் சிட்டி பல்கலைக் கழகத்தில் (City University) கிராஃபிக் டிசைனர் துறையில் பட்டம் பெற்றுள்ளார். கணினியில் வடிவமைக்கும் துறையில் மிகுந்த திறமையைப் பெற்றிருக்கும் இவருக்கு தமிழ்ப்பள்ளி அனுபவமே இக்கனவினை விதைத்ததாகக் கூறுகின்றார்.
இத்தம்பதியரின் மூன்றாவது வாரிசு திவ்யன் மணிசேகரன், ரவாங் தமிழ்ப்பள்ளியில் காலடி எடுத்து வைத்து இடைநிலைப் பள்ளியில் சிறந்த தேர்ச்சி யைப் பெற்று பகாங் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் பயின்று வருகின்றார். தமிழ்ப்பள்ளிகளில் கல்வியைத் தொடங்குவதன் வழி பிள்ளைகளின் எதிர்கா லத்தை நிர்ணயம் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கும் இக்குடும்பத்தினர் மற்ற மலேசிய இந்தியர்களுக்கு வழிகாட்டியாகவே திகழ்கின்றனர்.
மணிசேகரன் நாகூரான், வசுந்துரா இராஜ கோபால் தம்பதியர் தமிழ்மொழியின் மீதும் சமயத்தின் மீதும் கொண்டிருந்த பிணைப்பால் பிள்ளைகளின் தொடக்கக் கல்வியைத் தமிழ்ப்பள்ளியிலேயே தொடங்கி மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்கியுள்ளதைப்போல் மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்