“தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” எனப் பாடி பரவசம் ஊட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். தமிழ்மொ ழியை அமுதாகவும் உயிராகவும் மதித்த நமது சமூகம் வாழ்வியல் தேடல்களுக்
காக தமிழ்மொழியையே இழக்க நினைப்பதை வேதனையான விவகாரமாகவே கருத வேண்டியுள்ளது. தேசியப் பள்ளிகளில் சுமார் 70,000 மாணவர்கள், சீனப்பள்ளிகளில் ஏறக்குறைய 13,000 மாணவர்கள் என்பதை ஒட்டுமொத்த இந்திய சமூகமும் சிந்திக்க வேண்டிய விவகாரமாக உணர வேண்டும்.
திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை உள்வாங்கிக் கொண்டு தனது அன்புத் தாயான இராமாயி இராஜாங்கம் துணையுடன் தனித்து நின்று எல்லா வகையான சவால்களையும் எதிர்கொண்டு தமிழ்ப்பள்ளிகளில் ஆரம்பக் கல்வியைக் கற்று தனது மூன்று பெண் செல்வங்களையும் கரை சேர்த்திருக்கும் பெருமைக்குரிய தாயாகத் திகழ்கிறார் பூவரசி நடராஜன்.
தமிழ்ப்பள்ளி ஆசிரியையான பூவரசி நடராஜன் தற்போது எமரால்டு தமிழ்ப்பள்ளியில் பணியாற்றி வரும் நிலையில் எவ்விதமான சலனமும் இல்லாமல் தனது பிள்ளைகள் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்க எடுத்த முடிவு இனிமையான பலன்களைக் கொடுத்துள்ளதாகக் கூறுகின்றார். பூவரசி நடராஜனின் மூத்த புதல்வி காயத்ரி கிருஷ்ணசாமி நாட்டின் தலைசிறந்த பள்ளிகளின் ஒன்றான சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கி இடைநிலைக் கல்விக்குப் பின்னர் ஆசியான் மெட்ரோபோலிட்டன் பல்கலைக்கழகத்தில் (Asean Metropolitan University) மருத்துவத் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.
பூவரசி நடராஜனின் இரண்டாவது வாரிசு தர்ஷினி கிருஷ்ணசாமி சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் (SJKT Simpang Lima) கல்வியைத் தொடங்கி உயர்கல்வியை மலாக்கா மெட்ரிகுலேசன் கல்லூரியில் முடித்து விட்டு மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகத்தில் (Universiti Perlis Malaysia - Unimep) அனைத்துலக வணிகத் துறையில் இளங்கலை பட்டம்பெற்றுள்ளார்.
தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடர்ந்ததால் வலுவான குடும்ப உறவுகளை ஏற்படுத்துவதற்கான பண்பு நலன்களைத் தனது மூன்று பெண் பிள்ளை களும் பெற்றுள்ளதாகக் கூறும் பூவரசி நடராஜனின் மூன்றாவது வாரிசு லக்ஷ்ரிணி கிருஷ்ணசாமி, சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கி தற்போது சன்வே அனைத்துலகக் கல்லூரியில் (Sunway College) பட்டயக் கணக்காளர் துறையில் பயின்று வருகின்றார்.
தமிழ்ப்பள்ளியில் கற்பதன் வழி நல்ல பண்புகளையும் வாழ்வியலுக்குத் தேவையான மனப்பாங்கையும் பெற்று விடும் நிலையில் வாழ்வியல் சவால்க ளைச் சமாளிக்கும் திறன்கள் தானாகவே வந்து விடும் என உறுதியாகக் கூறுகின்றார் பூவரசி நடராஜன். தற்போதைய பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகளைத் தவிர்க்கும் காரணங்களைக் கண்டறிந்து நிவர்த்திக்கும் வழிவகைகளை ஆராய்ந்து தீர்வுகள் காணப்பட்டால் பிற பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்பதே பொதுவான கருத்தாகும். (-கே.ஜே)
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்