பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், நாளை வெள் ளிக்கிழமை 2017 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவிக்கவிருக்கும் வேளையில் பக்காத்தான் ஹராப்பான் தனது 2017 நிழல் பட்ஜெட்டை நேற்று அறிவித்தது. பட்ஜெட்டின் மொத்த தொகையை குறைத்தல், ஊழலை துடைத்தொழிக்கும் முறை, பொருள், சேவை வரியை சார்ந்து இருப்பதை குறைப்பது, அனைத்து மலேசியர்களுக்கும் சரிசமமான வாய்ப்பு எனும் உள்ளடக்கத்தை தாங்கிய 2017 நிழல் பட்ஜெட்டை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ வான் அஜிசா அறிவித்தார். பி.கே.ஆர்., ஜ.செ.க., அமானா ஆகிய கூட்டணிகளை உள்ளடக்கிய பக்காத்தான் ஹராப்பான், கடந்த 2016 பட்ஜெட்டில் பிரதமர் நஜீப் அறிவித்த 2,031 கோடி வெள்ளி மதிப்பிலான பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் 1000 கோடி குறைக்கப்பட்டு 1,031 கோடி வெள்ளி மதிப்பிலான பட்ஜெட்டை அறிவித்துள்ளது. அனைவருக்கும் சரிசமமான வேலை வாய்ப்பு வழங்கும் சட்டம், அதன் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கும் வகையில் உச்ச அதிகாரத்தை வழங்கியுள்ளது. இனம், சமயம், ஆண், பெண் பாகுபாடு அடிப்படையில் வேலை இடத்தில் ஒரு தொழிலாளருக்கு எதிராக பாரபட்ச போக்கு கடைப்பிடிக்கப்படுமானால் அதற்குரிய தண்ட னையை முதலாளிமார்களுக்கு வழங்கும் வகையில் தனது பட்ஜெட்டில் சில பரிந்துரைகளையும் முன் வைத்துள்ளன. மேலும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் வெ. 1,500 சம்பளத்தையும் அறிவித்துள்ளது. மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் ஜி.எஸ்.டி. வரியில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு அது மேம் படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதன் வழி 498 கோடி வெள்ளி மட்டுமே செலவிட வேண்டி வரும் என்ற கணக்கையும் அது முன்வைத்துள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்