திங்கள் 23, செப்டம்பர் 2019  
img
img

தமது 3 பிள்ளைகளையும் தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்க வைத்த சந்திரலிங்கம் சாமிநாதன் - அமுதவள்ளி வேலாயுதம் தம்பதியர்
சனி 15 டிசம்பர் 2018 13:11:31

img

“உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு; இதை உரக்கச் சொல்வோம் உலகிற்கு; இனம் ஒன்றாக மொழிவொன்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு” என உரக்கக் கூறியவர் கவிப் பேரரசு வைரமுத்து. இன ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டுமானால் தாய்மொழியான தமிழ்மொழியை  நிலைப்படுத்த வேண்டிய  அவசியம் இருப்பதை நாம் அனைவரும் அறிய  வேண்டும். தமிழர் என்பதை அடையாளப்படுத்தியதே தமிழ்மொழி என்பதை யாராவது மறுக்க முடியுமா?

தனக்கு தாய்மொழிப் பள்ளியில் படிக்கும் வாய்ப்புக் கிட்டாத நிலையில் தனது மூன்று பிள்ளைகளின் தொடக்கக் கல்வியைத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியதன்  நன்மையினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் சிலாங்கூர், சுங்கை பீலேக் புதுக்கிராமத்தில் வாழ்ந்து வரும் சந்திரலிங்கம் சாமிநாதன் - அமுதவள்ளி வேலாயுதம் தம்பதியர். சந்திரலிங்கம் சாமிநாதனின் துணைவி டெங்கில் அம்பார் தெனாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடக்கியவர் ஆவார்.

தாயின் விவேகமான தமிழ் மொழிப் பற்றின் பயனாகவே இத்தம்பதியரின் மூன்று செல்வங்களும் இன்று உயரிய கல்வி அடைவு நிலையை எட்டிப் பிடித்துள்ளன. சந்திரலிங்கம் சாமிநாதன் - அமுதவள்ளி வேலாயுதம் தம்பதியரின் தலைப்பிள்ளை விக்னேஸ்வரன் சந்திரலிங்கம், செப்பாங் தமிழ்ப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். சுங்கை பீலேக் இடைநிலைப்பள்ளியில்  கல்வியை  முடித்துவிட்டு நாட்டின் தலைசிறந்த பல்கலைக் கழகமான லிம் கோக் விங்  பல்கலைக்கழகத்தில் கட்டட வடிவமைப்புத்  துறையில் பட்டம் பெற்று இன்று கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகின்றார். 

அடுத்தவர் தேன்மொழி சந்திரலிங்கம், இவரும் செப்பாங் தமிழ்ப் பள்ளியில் கல்வியைத் தொடங்கி இடைநிலைப் பள்ளியில் கல்வியை முடித்துவிட்டு மலேசிய பல்லூடக  பல்கலைக்கழகத்தில் கணக்கியல் துறையில் இளங்கலைப் பட்டப் படிப்பை முடித்துவிட்டு கணவரோடு நீலாய் இலா பேப்சன் எனும் வணிக நிறுவனத்தை  வழிநடத்தி வருகின்றார்.

சந்திரலிங்கம் சாமிநாதன் - அமுதவள்ளி வேலாயுதம் தம்பதியரின் மூன்றாவது வாரிசு மேகநாதன் சந்திரலிங்கம் செப்பாக் தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்துவிட்டு தற்போது மின்சார இணைப்புகளுக்கான வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றார். தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கு வது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்! தமிழர் எனும் அடையாளத்தை நாம் இழக்காமல் இருக்க வேண்டுமானால் ஒவ்வொரு பிள்ளையின் தொடக்கக் கல்வியும் தமிழ்ப்பள்ளியில் தொடங்கப்பட வேண்டும் என உறுதியாகக் கூறுகின்றனர் சந்திரலிங்கம் சாமிநாதன் அமுதவள்ளி வேலாயுதம் தம்பதியர்.

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
செரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்?

அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு

மேலும்
img
102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.

1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த

மேலும்
img
இலங்கையில் பதற்றம் ஐ.நா  கவலை 

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்

மேலும்
img
3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.

ஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்

மேலும்
img
பிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.

பிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img