மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை! மொழியை இழந்த பல இனங்கள் இன்று அடியோடு இல்லை. தமிழினம் நீடித்து இருக்கவும் தங்களின் பாரம்பரியத்தினைக் காப்பதற்கும் தமிழ் மொழியிலேயே ஒவ்வொருவரும் கற்கும் வாய்ப்பினை உருவாக்க வேண்டும். தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் மலேசிய இந்தியர்கள் அனைவரும் வருமுன் காப்போனாக இருக்க வேண்டும் என்பதே இன்றைய தேவையாகும்.
பேரா மாநிலத்தில் சிலிம் வில்லேஜ் எனப்படும் சிறிய கிராமத்தினைப் பூர்வீகமாகக் கொண்ட இராமசாமி கோவிந்தசாமி - கமலாதேவி பாலசுந்தரம் தம்பதியரின் ஆறு வாரிசுகளையும் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வைத்து பெருமைப்படும் அதே வேளையில், அனைவரும் மிகச் சிறந்த நிலையில் கல்வி பெற்றுள்ளதைப் பூரிப்போடு பார்க்கின்றனர். தமிழ்ப் பள்ளிகள் கல்வியைப் போதிக்கும் பாடசாலைகளாக மட்டும் அல்லாமல் பாரம்பரியத்தினைத் தொடரச் செய்யும் தளமாகவும் இருந்து வருவதாகக் கூறுகின்றார் பெருமைக்குரிய தந்தை இராமசாமி கோவிந்தசாமி.
ஜோதிடக் கலையில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்தவரான இராமசாமி கோவிந்தசாமி - கமலாதேவி பாலசுந்தரம் தம்பதியரின் மூத்த பெண் பிள்ளை யோகப் பிரியங்கா இராமசாமி, சிலிம் வில்லேஜ் தமிழ்ப் பள்ளியில் (SJKT - Slim Village) கல்வியைத் தொடங்கியவர். பல்கலைக்கழக உயர்கல்விக்குப் பின்னர் தற்போது பொறியியல் நிறுவனத்தில் இவர் நிர்வாக இயக்குனராகப் பணியாற்றி வருகின்றார் (Micro Minute Engineering). அடுத்த வாரிசு புவனப் பிரியா இராமசாமியும் சிலிம் வில்லேஜ் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கியவர். இளங்கலைப் பட்டப் படிப்பிற்குப் பிறகு தற்போது தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார்.
இத்தம்பதியரின் மூன்றாவது பெண் வாரிசு விஷ்ணுவர்த்தினி இராமசாமி, சிலிம் ரிவர் தமிழ்ப் பள்ளியில் (SJKT - Slim River) கல்வியைத் தொடங்கி யூனிசெல் பல்கலைக் கழகத்தில் கணக்கியல் துறையில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர்களின் நான்காவது பெண் வாரிசு புத்தகர்ஷிணி இராமசாமி, சிலிர் ரிவர் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கி போலி டெக்னிக் கல்லூரியில் தொழிலியல் வடிவமைப்புத் துறையில் (Industrian Designing) டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார். ஐந்தாவது பெண் வாரிசான ரத்தியாஸ்ரீ இராமசாமி, சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியில் காலடி எடுத்து வைத்து தற்போது ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் (IPGM - IPOH) பயிற்சி பெற்று வருகின்றார்.
இராமசாமி கோவிந்தசாமி அர்ச்சகர் தொழிலோடு, ஜோதிடக் கலையையும் மேற்கொண்டு வரும் நிலையில் இல்லத்தரசியான கமலாதேவி பாலசுந்த ரம் பிள்ளைகள் அனைவரையும் மிகச் சிறந்தவர்களாக உருவாக்கியுள்ளார். குடும்பத்தில் ஆறாவது பிள்ளையான ஒரே ஆண் வாரிசு ஜோதிநாதன் இராமசாமி, சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கி தற்போது இடைநிலைப் பள்ளியில் கல்வி கற்று வருகின்றார்.
தமிழ்ப் பள்ளிகளில் கல்வியைத் தொடங்குவது துளியளவும் பின்னடைவினை ஏற்படுத்தாது என்பதை இராமசாமி கோவிந்தசாமி, கமலாதேவி பால சுந்தரம் தம்பதியரின் வாரிசுகள் நிரூபித்துள்ளனர். தமிழ் மொழியைக் காக்கவும் தமிழினத்தை வாழச் செய்யவும் தமிழ்ப் பள்ளிகளில் கல்வியைத் தொடங்கவும் அனைவரும் முன் வர வேண்டும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்