ஞாயிறு 01, டிசம்பர் 2024  
img
img

என் ஐந்து பெண் வாரிசுகளின்  வாழ்க்கையை ஒளிமயமாக்கிய  தமிழ்ப்பள்ளிகள்.
புதன் 12 டிசம்பர் 2018 12:33:18

img

‘யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிது ஆவது எங்கும் காணோம்’ என உரக்கக் கூறிய மகாகவி சுப்ரமணிய பாரதியாரின்  136ஆவது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் தமிழ்மொழிக்கு மகுடம் சூட்டும் தமிழ்ப்பள்ளிகள் நீடித்து நிலைத்திருக்க ஒவ்வொரு பிள்ளையின் தொடக்கக் கல்வியைத் தமிழ்ப் பள்ளியிலேயே தொடங்கும்  வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். 

நெகிரி செம்பிலான், பகாவ் நகருக்கு அருகில் அமைந்திருக்கும் கெடீஸ் தோட்டத்தில் இரப்பர் மரம் சீவும் தொழிலாளிகளான காலஞ்சென்ற முனியாண்டி முருகேசன் - சுசிலா மாணிக்கம் தம்பதியரின் ஐந்து பெண் வாரிசுகளின்  ஒளிமயமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைத்திருப்பது  தமிழ்ப்பள்ளிகளே என்பதை யாருமே மறுக்க முடியாது.  30.8.1997இல் அகால மரணமடைந்த கணவரின் இழப்பைத் தாங்கிக் கொண்டு தனித்து நின்று ஐந்து பெண் பிள்ளை களுக்கும் நிறைவான கல்வியைத் தந்து இன்று பெருமைமிகு  தாயாக மிளிரும் இவரது தியாகத்திற்கு அனைவரது வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

கடந்த வாரம் ஐந்து பெண் வாரிசுகள்ஒன்றிணைந்து தாயாரை வெளிநாட்டு சுற்றுலாவிற்கு முதல்முறையாக அழைத்துச் சென்று மகிழ்வுபடுத்தி யிருக்கும் பண்பினை நிச்சயமாகத் தமிழ்ப்பள்ளிகளே விதைத்திருக்க வேண்டும்.

முனியாண்டி முருகேசன்   - சுசிலா மாணிக்கம் தம்பதியரின் மூத்த பெண் வாரிசு நவநீதம் முனியாண்டி பகாவ், கெடிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கி, பகாவ் இடைநிலைப் பள்ளியில் உயர் கல்வியைப் பெற்று  இன்று சொந்த வர்த்தகத்தினை வழி நடத்தி வருகின்றார். இவரின் தியாகத்தினால் அடுத்தவர் உமாதேவி முனியாண்டி, பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கல்வியைப் பெற்று சிரம்பான் ராஜா மெலேவார் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் (IPRM)  பட்டம் பெற்ற ஆசிரியராகத் தான் கல்வி கற்ற அதே பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றி வருகின்றார். 

குடும்பத்தில் மூன்றாவது வாரிசு அன்புமதி முனியாண்டி, இவர் செயிண்ட் ஹீலியர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டைத் தொடங்கி மலேசிய வடக்கு பல்கலைக் கழகத்தில்  (UUM) பல்லூடகத் துறையில் இளங்கலை  பட்டம் பெற்று  தற்போது பெடானா ஜெயா  குகு19 தேசியப் பள்ளி யில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.  தமிழ்ப் பள்ளியில்  கல்வியைத் தொடங்கியதால் தாயின் தியாகத்திற்கு நன்றி கூறும் பண்புகள் தானாகவே அமைந்துவிட்ட நிலையில் நான்காமவர், விஜயலெட்சுமி முனியாண்டி பகாவ் செயிண்ட்  ஹீலியர் தமிழ்ப் பள்ளியில் கல்வியைத் தொடங்கி மலேசிய திரெங்கானு பல்கலைக் கழகத்தில் (UMT) பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்று  தற்போது நெகிரி செம்பிலான் ஆயர் ஈத்தாம் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகின்றார்.

காலஞ்சென்ற முனியாண்டி முருகேசன், சுசிலா மாணிக்கம் தம்பதியரின் கடைசி வாரிசு, கீதா முனியாண்டி தமக்கைகள் கல்வியைத் தொடங்கிய  அதே தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கி மலேசிய திறந்தவெளி பல்கலைக் கழகத்தில்  (OUM) பல்லூடகத் துறையில்  பட்டம் பெற்று சொந்தமாக அழகுக் கலை நிலையத்தை நடத்தி வருகின்றார். 

இரப்பர் மரம் வெட்டும் தலைமுறையை தலை நிமிரச் செய்திருக்கும் ஆற்றலைத் தமிழ்ப் பள்ளிகளே வழங்கியிருப்பதை  சுசிலா மாணிக்கம் பூரிப்போடு தெரிவித்துக் கொண்டுள்ளார். இக்குடும்பத்தின் வெற்றியை மலேசியர்கள் பாராட்டும் அதே வேளையில்  தமிழ்ப்பள்ளியில்  பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியைத் தொடங்கும் முடிவினையும் எடுக்க வேண்டும் என அனைவரும் கேட்டுக் கொண்டுள்ளனர். 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img