திங்கள் 02, டிசம்பர் 2024  
img
img

எங்களைப் போல் உங்கள் பிள்ளைகளுக்கும் தமிழ்ப்பள்ளியைத் தேர்ந்தெடுங்கள்.
செவ்வாய் 11 டிசம்பர் 2018 16:36:26

img

தமிழ் கல்விக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் மலேசியாவில் 200 ஆண்டுகால  வரலாறு உண்டு என்பதே சாதனையான விவகாரமாகும்! மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளை  நிலைக்கச் செய்திருக்கும் நமது முன்னோர்களின் போராட்டத்திற்கு நாம் நன்றி கூறியே ஆகவேண்டும்!

தமிழ்ப்பள்ளிகள் வெறும் கல்விக் கூடங்களாக மட்டும் செயல்படாமல் சமூக உருமாற்றத்திற்கான நிலையமாகவும் செயலாற்றி வருவதாகக் கூறுகி ன்றார் சிலாங்கூர் துவான் மீ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்று இன்று மனோவியல் ஆலோசகராக திகழ்ந்துவரும் முனைவர் இரா.அண்ணாதுரை. இவருடைய துணைவியார் விமலா சுப்பிரமணியம், பேரா, சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்று இன்று ஓர் ஆசிரியராகப் பணி யாற்றி வருகின்றார்.

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதற்கு ஏற்றவாறு அண்ணாதுரை இரங்கநாதன், விமலா சுப்பிரமணியம் தம்பதியர் தங்களது மூன்று செல்வங்களையும் தமிழ்ப்பள்ளியிலேயே கல்வியைத் தொடங்கும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளனர். தமிழ்ப்பள்ளிகளில் பயில்வதன் வழியே நமது பாரம்பரியத்திற்கு ஏற்றவாறு எதிர்காலத்தினை உறுதி செய்ய முடியும் என்பதை குடும்பமே நிரூபித்துள்ளது.

முனைவர் அண்ணாதுரை இரங்கநாதன் - விமலா சுப்பிரமணியம் தம்பதியரின் தலைப்பிள்ளை இராக மஞ்சரி அண்ணாதுரை, சிலாங்கூர் ரவாங் தமிழ்ப்ப ள்ளியில் கல்வியைத் தொடங்கியவர் தற்போது மலேசிய பல்லூடக பல்கலைக்கழகத்தில் (MMU)  சட்டத்துறையில் இறுதியாண்டு மாணவியாகத் தனது கனவினை எட்டிப் பிடித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் ஐக்கிய நாட்டு இளைஞர் சபையில் (UN Youth Assembly) மிகச் சிறந்த பேராளராகவும் விளங்கியுள்ளார்.

அடுத்தவர் தேவரூபன் அண்ணாதுரை. பூச்சோங் 14ஆவது மைல் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கியவர் தற்போது மலாயாப் பல்கலைக்க ழகத்தில் நிபுணத்துவ தொடர்பு கல்வித்துறையில் இரண்டாம் ஆண்டு மாணவராகக் கல்வியைத் தொடர்ந்து வருகின்றார். இரா.அண்ணாதுரை- சு.விமலா தம்பதியரின் கடைக்குட்டி சாந்தரூபன் அண்ணாதுரை, பூச்சோங் 14ஆவது மைல் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கி தற்போது பிடி3 தேர்வு முடிவிற்காகக் காத்திருக்கின்றார்.

தமிழ்ப்பள்ளிகளில் ஆரம்பக் கல்வியைப் பெற்றிருக்கும் குடும்பங்களில் பிள்ளைகளின் லட்சியக் கனவுகளை நனவாக்கும் சோலைகளாகவே தமிழ்ப்ப ள்ளிகள் திகழ்ந்து வருகின்றன என்பதை நிரூபிக்க சான்றுகள் தேவையில்லை. நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் மலேசிய இந்தியர்கள் அனைவரின் கல்வித் தேவையை நிறைவு செய்ய வேண்டும் என்ற சிந்தனை நமது சமூகத்திற்கு வர வேண்டும் என்பதே தங்களின் எண்ணம் என்பதே இரா.அண்ணாதுரை - சு.விமலா தம்பதியர் தெளிவுபடக் கூறுகின்றனர்.

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img