தமிழ் சோறு போடுமா எனக் கேட்கும் சமூகத்தினரிடையே தமிழ் மொழியின் மீதும் தமிழ்ப்பள்ளிகளின் மீதும் மாறாத நம்பிக்கைக் கொண்டிருக்கும் சிலரால் மட்டுமே இன்று வரை தமிழ்ப்பள்ளிகள் அடையாளத்தை இழக்காமல் நிலைத்திருக்கின்றன. இன்று வரையிலும் தமிழ்ப் பள்ளிகளில் தங்களது வாரிசுகளை பதிந்து வரும் அனைவருக்கும் சமூகத்தின் சார்பில் நன்றிகள் கூறப்பட வேண்டும்.
ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியும் சாதனை படைத்த ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கியுள்ளது. அந்த வரிசையில் சிலாங்கூர் மாநிலத்தின் மிகச் சிறந்த பள்ளிகளில் ஒன்றான காஜாங் தமிழ்ப்பள்ளி (SJKT Kajang) ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பிள்ளைகளையும் பட்டதாரிகளாக்கி பெற்றோர்களின் லட்சியக் கனவினை நனவாக்கியுள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றவரான விஜயன் ஆறுமுகம் தன் மனைவி நீலா கேசவன் துணையுடன் தன் நான்கு பிள்ளைகளையும் கல்வியில் வானுயர உயர்த்தி சாதனை படைத்துள்ளார்.
அரிய முயற்சியால் தனது தொழிலில் வெற்றி பெற்று உலக நாடுகள் பலவற்றிற்கும் பணி நிமித்தமாக சென்றிருக்கும் விஜயன் ஆறுமுகம், தமிழ்மொழி உணர்வால் கொஞ்சமும் சந்தேகமில்லாமல் தன் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியதன் இனிய பலனை இங்கு அறுவடை செய்துள்ளார்.
குடும்பத்தில் மூத்தவர் லிங்கம் விஜயன். காஜாங் தமிழ்ப்பள்ளியின் சிறந்த மாணவராக தேர்வு பெற்று தனது உயர்கல்வியை சரவா சுவின்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் பொறியியல் துறையில் பட்டம் பெற்று தற்போது சிங்கப்பூரில், நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.இரண்டாமவர் தமிழரசன் விஜயன். காஜாங் தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்று நீலாய் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.
குடும்பத்தில் மூன்றாம் ஆண் வாரிசு பொன்ராஜ் விஐயன். காஜாங் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கி உபகாரச் சம்பளத்தின் உதவியோடு லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் (University College of London) இயற்பியல் துறையில் பட்டம் பெற்று தனது முதுகலைக் கல்வியையும் உபகாரச் சம்பள உதவியுடன் ஜெர்மன் ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழகத்தில் (University Stuttgart of German) பயின்று வருகிறார்.
விஜயன் ஆறுமுகம் - நீலா கேசவன் தம்பதியரின் கடைக்குட்டி அரவிந்த் ராஜ் விஜயன். யூனிடென் பல்கலைக்கழகத்தில் கணினி மென்பொருள் பொறி யியல் துறையில் இளங்கலை பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். விஜயன் ஆறுமுகம் - நீலா கேசவன் தம்பதியர் கொண்டிருந்த தமிழ்ப்பள்ளி மீதி லான நம்பிக்கை ஒருபோதும் வீணாகாமல், அவர்களின் நான்கு செல்வங்களும் பெற்றிருக்கும் சிறப்பான எதிர்காலம் அனைவருக்கும் தமிழ்ப்பள்ளி களின் மீதிலான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்றே நம்புவோம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்