img
img

எங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வாழ்க்கையில் உயரவைத்தோம்.
சனி 08 டிசம்பர் 2018 12:30:47

img

கடந்த 17 அக்டோபர் 1981-இல் மிச்சிகன் நகர் சென்றிருந்த கவிஞர் கண்ணதாசன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பார்க்க வந்தவர்களின் பிள்ளைகள் தமிழ் பேச முடியாததைக் கண்டு கவிஞர் வேதனையோடு, மனதினில் ஒன்றுபட்டு சேர்ந்திருப்பீர்;இங்கு மழலைகள் தமிழ்பேச செய்து வைப்பீர்;தமக்கென கொண்டு வந்தது ஏதுமில்லை;

பெற்ற தமிழையும் விட்டு விட்டால் வாழ்க்கை இல்லை! எனப் பாடிய இறுதிக் கவிதையில் கூறியிருந்ததை நாம் பாடமாக எடுத்துக் கொண்டால் மறந்தும் பிள்ளைகளை வேற்று மொழிப் பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்று தெளிவு பெற வேண்டியதன் அவசியம் இருப்பதை அனைவரும் உணர  வேண்டும்.

சபாபதி பேரா, சுங்கை சிப்புட் நகரைத் தாயகமாகக் கொண்ட தமிழாசிரியர் சபா. கணேசு - இராஜேஸ்வரி சின்னதம்பி இணையர் தாங்கள் கடந்து வந்த பாதையை விட்டு விலகாமல் தங்களின் இரு வாரிசுகளையும் தமிழ்ப்பள்ளியிலேயே  சேர்த்து கல்வியறிவை ஊட்டியது வீண்போகவில்லை எனப் பெருமையோடு கூறுகின்றனர். கணேசு சபாபதியின் உடன் பிறப்புகள் 10 பேர்;  இராஜேஸ்வரி சின்னதம்பியின் உடன் பிறப்புகள் 10 பேர் எனும் நிலையில் அனைவரும் தமிழ்ப்பள்ளியிலேயே கல்வியைத் தொடங்கிய ஒற்றுமையைப் பெற்றுள்ளனர்.

தந்தையார் சபா.கணேசு கல்வியைத் தொடர்ந்த சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலையிலேயே தனது முதலாம் ஆண்டுக் கல்வியை தொடங்கிய முதல் வாரிசான பனிமுகில் சபா.கணேசு யூ.பி.எஸ்.ஆர், பி.எம்.ஆர் மற்றும் எஸ்.பி.எம் ஆகிய அனைத்து தேர்வுகளிலும் எல்லா பாடங்களிலும் ்ஏீ பெற்று சாதனை படைத்துள்ளதற்கு மேலும் சான்றுகள் வேண்டுமா என்பதே கேள்வியாகும். தேர்வுகளில் சாதனை படைத்த பனிமுகில் சபா.கணேசு தனது இளங்கலைக் கல்வியை உயிரியல் வேதியல் பொறியியல் (ஆடிணி  இடஞுட்டிஞிச்டூ உணஞ்டிணஞுஞுணூடிணஞ்) துறையில் மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் (க்ஓ–) முடித்து விட்டு தற்போது முதுகலைக் கல்வியை தொடர்கின்றார்.

தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்பதால் இழப்பதற்கு எதுவுமே இல்லை என்பதை சபா கணேசு - இராஜேஸ்வரி சின்னத்தம்பி தம்பதியரின் இரண்டாவது புதல்வி வெண்ணிலா சபா. கணேசும் நிரூபித்து உள்ளார். மகாத்மா காந்தி கலாசாலையில் கல்வியைத் தொடங்கி யூ.பி.எஸ்.ஆர் தேர்வு தொடங்கி எஸ்.பி.எம் தேர்வு வரை சிறந்த தேர்ச்சியைப் பெற்ற வெண்ணிலா சபா.கணேசு தற்போது பெர்லிஸ் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் பயின்று வருகின்றார்.

தமிழ் வளர்த்த சுங்கை சிப்புட் நகரில், சபா.கணேசு- இராஜேஸ்வரி தம்பதியர் முன்மாதிரியாகவே அனைவருக்கும் திகழ்கின்றனர். தமிழ்ப்பள்ளிகளின் வழி மாணவர்களுக்குக் கிடைக்கும் ஒழுக்க நெறியும் மொழியுணர்வும் அடுத்த தலைமுறையினரின் சீரான வாழ்விற்கு அடிச்சுவடு அமைத்து கொடுக்கும் என ஆணித்தரமாக இவர்கள் கூறுகின்றனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img