தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே அப்போலோ மருத்துவ மனையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா வெளியேற உள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சைக்காக முதல்வர் சிங்கப்பூர் செல்வார் என்ற தகவலால் கவலை யடைந்திருந்த தொண்டர்கள், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்ப போகிறார் என்ற தகவலை கேட்டதில் இருந்து உற்சாகமடைந்துள்ளனர். கடந்த செப்டம்பர் 22ஆம் தேதியில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை சிங்கப்பூரில் இருக்கும் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு மாற்றினால், விரைவில் பழைய நிலைக்கு திரும்புவார் என்று அப்போலோ வட்டாரத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் சோல்லப்பட்டதாக தெரிகிறது. சிங்கப்பூரிலிருந்து தலைமை பிசியோதெரபி பெண் மருத்துவர்கள் இருவர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து இரண்டு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். முதல்வரின் உடல்நிலையைப் பரிசோதித்து அவர்களின் தற்போதைய நிலை பற்றி மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு தெரிவித்துள்ளனர். போயஸ் கார்டனில் தரைத்தளத்திலிருந்து முதல் தளத்துக்குச் செல்ல லிஃப்ட் வசதி உண்டு. தற்போது ஸ்ட்ரெச்சர் ஏற்றுமளவுக்கு போயஸ் கார்டனில் உள்ள லிஃப்ட்டை மாற்றியமைத்து வருகிறார்கள். அறைகளும் மருத்துவமனை வசதிக்கு ஏற்ப மாற்றப்படுகிறது. இந்தப் பணிகள் முடிந்த உடன் முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. கேரளாவில் உள்ள ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்கள் சிலர், வரும் 27ஆம் தேதி ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செது போயஸ் கார்டனுக்கு மாற்றலாம் என்று கூறியுள்ளதால், தீபாவளிக்கு முன்பு முதல்வர் வீடு திரும்புவது உறுதி என்று அதிமுக வட்டார தகவல்கள் கூறுகின்றன. ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஜ் செயப்படுவார் என்ற தகவல் கசிந்ததில் இருந்தே அதிமுகவினர் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்