நாட்டில் செயல்பட்டு வரும் 525 தமிழ்ப்பள்ளிகள் மலேசிய இந்தியர்களின் தாய்மொழியையும் பாரம்பரியத்தையும் சமய நம்பிக்கையைும் தலைமுறை மாறாமல் காத்து நிற்கும் நிலையங்களாகவே கருதப்பட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளில் கல்வியைத் தொடர்வது வரப்பிரசாதமாகவே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். தோட்ட மேலாளராக பணியாற்றிய போது தமிழுணர்வு மாறாமல் நான்கு பிள்ளைகளும் தமிழ்ப்பள்ளியிலேயே கல்வியைத் தொடங்கு வதற்கான முடிவு துளியளவும் ஏமாற்றத்தைத் தரவில்லை என்பதை நிரூபித்துள்ளனர் மாரியப்பன் அர்ஜுனன் - கண்ணகி கருப்பையா தம்பதியர்.
மாரியப்பன் அர்ஜுனன்-கண்ணகி தம்பதியர் இருவருமே ஆரம்பக் கல்வியை புக்கிட் கிளேடேக் தமிழ்ப்பள்ளியில் தொடங்கியிருந்த வேளையில் பிள்ளை களின் கல்வியையும் நெகிரி செம்பிலான் ஆயர் கூனிங் செலாத்தான் தமிழ்ப்பள்ளியில் தொடங்கியதன் இனிமையான பலன்களின் மகிழ்வோடு குடும்ப த்தினரின் பயணம் தொடர்கின்றது.
மாரியப்பன் அர்ஜுனன் - கண்ணகி கருப்பையா இணையரின் நான்கு புதல்வர்களில் மூத்தவர் பழனிகுமார் மாரியப்பன். தோட்டச் சூழலில் வாழ்ந்திருந்தா லும் தமிழ்ப்பள்ளியில் கிடைக்கப்பெற்ற கல்விச் செல்வத்தை ஈப்போ ஆசிரியர் பயிற்சிக்கழகத்தில் உயர்கல்வியைப் பெற்று இன்று ஓர் ஆசிரியராக உயர்ந்துள்ளார்.
அடுத்தவர் நந்தகுமார் மாரியப்பன், தோட்டப்புறப் பள்ளியில் கலவியைத் தொடங்கி மலாயாப் பல்கலைக்கழகத்தில் (க்) பட்டயக்கல்வியை மேற்கொண்டு குடும்ப மகிழ்ச்சிக்கு வித்திட்டுள்ளார். இன்று நமது நாட்டில் பிரசித்திப் பெற்ற திரை வெளியீட்டு நிறுவனம் ஒன்றில் புதிதாக வரும் திரைப்படங்களை வெளியிடுவதற்கான முடிவினைச் செய்யும் உயரிய பதவியில் இருந்து வருகின்றார்.
குடும்பத்தில் மூன்றாமவர் லெட்சுமண் குமார் மாரியப்பன். இவரும் நெகிரி செம்பிலான், ஆயர் கூனிங், செலாத்தான் தமிழ்ப்பள்ளியில் தொடங்கி இன்று தனியார் நிறுவனம் ஒன்றில் உயரிய பணியில் அமர்ந்துள்ளார். தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கினால் எதிர்காலம் இல்லை என்பதை பொய்ப்பி த்திருக்கும் மாரியப்பன் அர்ஜுனன் - கண்ணகி கருப்பையா தம்பதியரின் கடைக்குட்டி மலர் மஞ்சு மாரியப்பன், மூத்தவர்கள் கல்வி பயின்ற அதே தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்று உயர்கல்வியையும் பெற்றுள்ளார்.
தமிழ்ப்பள்ளியில தொடங்கும் கல்வியால் ஒழுக்க நெறிகளையும் இலக்கிய ஆற்றலையும் பெறும் அதே வேளையில் மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்கும் ஆற்றலையும் வளர்ப்பதாகக் கூறுகின்றார் நந்தகுமார் மாரியப்பன்.
நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை நமது சமூகத்தின் பலவீனமாகவே கருதும் நந்தகுமார் மாரியப்பன், பெற்றோர்கள் நம்பிக்கையோடு தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்