பந்திங்,
தாய்மொழிக் கல்வியின் வழியே பிள்ளைகளை உடல், மனம் மற்றும் ஆன்மீக ரீதியாக வளப்படுத்த முடியும் என்பதாக உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்காமல் ஆன்மீக வளர்ச்சியிலும் முழுமையான ஈடு பாட்டினைக் கொண்டிருப்பதை முழுமையாக நம்பியதன் அடிப்படையில் தனது மூன்று செல்வங்களின் ஆரம்பக் கல்வியை தமிழ்ப்பள்ளியிலேயே தொடங்கும் வாய்ப்பினை வழங்கியதாகப் பெருமையோடு கூறுகின்றனர் சிலாங்கூர், பந்திங் நகரில் வசித்துவரும் இராஜதீரன் இராஜகோபால் - சரஸ்வதி கணபதி தம்பதியர்.
தாய்மொழிக் கல்வியின் வழி சிறந்த தலைமைத்துவ ஆற்றலைப் பெற முடியும். என நிரூபித்துள்ளார் இராஜதீரன் இராஜகோபால் - சரஸ்வதி கணபதி இணையரின் மூத்த புதல்வி யாழினி மீனா இராஜதீரன். சிலாங்கூர் ஜெஞ்சாரோம் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடர்ந்த இரா.யாழினி மீனா இடைநிலைப்பள்ளிக் கல்வியை தெலுக் பங்லீமா காராங் (SMK Teluk Panglima Garang) பள்ளியில் முடித்து விட்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் (க்) இந்திய ஆய்வியல் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் (க்ஓ) வணிக நிர்வாகத் துறையில் முதுகலைக் கல்வியைப் பெற்றுள்ளார்.
மலாயாப் பல்கலைக்கழகப் பேரவைக் கதைகள் நிகழ்வின் இயக்குநராகப் பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ்சுதிருக்குறளில் வணிகவியல் கோட்பாடுகள்ீீ எனும் தலைப்பில் கட்டுரையும் படைத்துள்ளார்.
இத்தம்பதியரின் இரண்டாவது வாரிசான திருநாவுக்கரசு இராஜதீரன் ஜெஞ்சாரோம் தமிழ்ப்பள்ளியில் கல்வி பயின்று, தெலுக் பங்லீமா காராங் இடைநிலைப்பள்ளியில் உயர்கல்வியைப் பெற்று மலேசிய வடக்குப் பல்கலைக்கழகத்தில் (UUM) கல்வியை முடித்துவிட்டு தற்போது பயிற்சியை மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த 40 ஆண்டுகளாக தன்னார்வ நிலையில் தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பாடங்களை மாணவர்களுக்குப் போதித்து வரும் ஒரு காப்புறுதி முகவரான இராஜதீரன் இராஜகோபாலின் மூன்றாவது வாரிசான யாதவி இராஜதீரன் அதே ஜெஞ்சாரோம் தமிழ்ப்பள்ளியில் காலடி எடுத்து வைத்து இன்று இந்தியா மணிப்பால் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறை மாணவராக உயர்ந்துள்ளார்.
கல்வியை இறை சக்தியாகக் காணும் உணர்வு நம்மிடம் மட்டுமே இருப்பதால் தமிழ்ப்பள்ளிகளில் மட்டுமே அவ்வுணர்வைப் பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கும் இராஜதீரன் இராஜகோபால் - சரஸ்வதி கணபதி இணையரைப் போல் ஆயிரக்கணக்கான பெற்றோர்களை உருவாக்க தமிழ்ப்பள்ளிகள் காத்திருக்கின்றன. எனவே தமிழ்ப்பள்ளியில் கல்விப் பயணத்தைத் தொடங்குவதற்கு எவ்விதமான சந்தேகமும் தேவையில்லை என்பதை இராஜதீரன் இராஜகோபால் பதிவு செய்கின்றார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்