கிள்ளான்,
மலேசிய நாட்டில் இன்றுவரை செயல்பட்டு வரும் தமிழ்ப்பள்ளிகள் நமது சமூகத்தின் வரலாற்று அடையாளமாகும். புலம் பெயர்ந்து வந்திருந்தாலும் தாய் மொழியான தமிழை நிலைக்கச் செய்திருக்கும் தமிழ்ப் பள்ளிகளில் பிள்ளைகளின் கல்வியைத் தொடங்குவது ஒவ்வொருவரின் கடமையாகும் என்பதை தெளிவாகக் கூறுகின்றனர் கிள்ளான் நகரில் வசித்து வரும் செல்வநாயகம் துரைசாமி, தவமணி நாகப்பன் தம்பதியர்.
தமிழ்ப் பள்ளிகளில் மட்டுமே தமிழுணர்வோடு தமிழர் பண்பினையும் விதைக்க முடியும் என்பதை நம்பிய காரணத்தால் தங்களது மூன்று பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியைத் தமிழ்ப் பள்ளியிலேயே தொடங்குவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியதாக கூறுகின்றார் ஸ்ரீ அண்டலாஸ் இடைநிலைப் பள்ளியில் மாணவர் மனநல ஆலோசகராப் பணியாற்றி வரும் செல்வநாயகம் துரைசாமி.
இத்தம்பதியரின் மூத்த புதல்வி செல்வி மீனா செல்வநாயகம், போர்ட் கிள்ளான் வாட்சன் தமிழ்ப் பள்ளி என்று அழைக்கப்பட்ட ராஜா மூடா மூசா சாலைத் தமிழ்ப் பள்ளியில் தொடங்கி, இடைநிலைக் கல்வியை கிள்ளான் கான்வெண்ட் (Smk Convent Klang) பள்ளியில் முடித்துவிட்டு ஜொகூர் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் பயின்று மலேசிய சபா பல்கலைக் கழகத்தில் (UMS) உணவு அறிவியல் மற்றும் சத்துணவுத் துறையில் இளங்கலை பட்டப் படிப்பை முடித்துவிட்டு மலேசிய புத்ரா பல்கலைக் கழகத்தில் (UPM) முதுகலைப் பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகின்றார்.
இத்தம்பதியரின் இரண்டாவது புதல்வர் பிரவின் குமார் செல்வநாயகம், சாதனைகள் படைத்து வரும் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் முடித்துவிட்டு ஸ்ரீ அண்டலாஸ் இடைநிலைப் பள்ளியில் (SMK Sri Andalas) தொடர்ந்து துன் ஹுசேய்ன் பல்கலைக் கழகத்தில் (Universiti Tun Hussein) கணினித் துறையில படித்து முடித்துள்ளார்.
தன்னுடைய இரண்டு மூத்தவர்களின் அடியைப் பின்பற்றி இளையவரான ரவிகுமார் செல்வநாயகம் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டுக் கல்வியைத் தொடங்கி கிள்ளான் ஸ்ரீ இஸ்தானா படிவம் 6 கல்லூரியில் (Kolej Tingkatan 6, Klang) தேர்ச்சி பெற்று தற்போது மலேசிய சபா பல்கலைக் கழகத்தில் (UMS) அனைத்துலக வர்த்தகத் துறையில் பயின்று வருகின்றார்.
தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர்களால் ஊட்டப்பட்ட தமிழ் உணர்வும், பண்பாட்டின் கூறுகளும் மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்கும் அஸ்திவாரமாக அமைந்திருப்பதை அனைவரும் உணர்ந்து எவ்விதமான சந்தேகமும் இல்லாமல் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளியில் பயிலும் வாய்ப்பினைப் பெற்றோ ர்கள் உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையை முன் வைத்துள்ளனர் கல்வியில் வெற்றி பெற்றிருக்கும் பிள்ளைகளின் பெற்றோர்.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்