img
img

பெட்ரோனாஸின் தீபாவளி சிந்தனை குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் அவசியத்தை வலியுறுத்தும் குறும்படம்
ஞாயிறு 04 நவம்பர் 2018 17:08:36

img

கோலாலம்பூர், 

 தீபாவளி நன்னாளில் மட்டுமின்றி, வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும்   குடும்ப உறவுகளையும் பிணைப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்பதை மையமாக வைத்து, அதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ‘மோனோகுரோம்’ (ஒற்றை வண்ணம்) எனும் வலைத்தள குறும்படம் ஒன்றை பெட்ரோனாஸ் நிறுவனம் தயார் செய்துள்ளது.

இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நமது பழைய பண்பாடுகளை மீண்டும் நமக்கு நினைவுறுத்தும் வகையில் இந்த குறும்படம் அமைந்திருப்பதாக பெட்ரோனாஸ் குழும வியூகத் தொடர்பு பிரிவின் மூத்த பொது நிர்வாகியான ஜக்காரியா (லிஸா) அப்துல் ரஹ்மான் கூறினார்.

வயதானவர்களுக்கும் இளையோருக்கும் மத்தியில் நிலவும் வெவ்வேறான எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகளின் காரணமாக ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே விரிசல் அடையும் உறவுகளை சரிசெய்யும் குடும்பப்பாங்கான ஒரு கதைதான் இது. குடும்பம் என்பது நமது நாட்டைப் போன்றது. நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றாக சுபிட்சத்துடன் வாழும் வாழ்க்கையின் பொதுவான நன்மதிப்பை நாம் மறப்பதில்லை. 

இந்த தீபாவளி நன்னாளில், தலைமுறைகளுக்கிடையே உறவுகளை மேம்படுத்துவதில் பரஸ்பர புரிந்துணர்வையும் மதிப்பையும் தொடர்ந்து வலி யுறுத்தும்படி அனைத்து மலேசியர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். வாழ்க்கையில் நாம் எவ்வளவு தூரம்தான் சென்றாலும், என்னதான் வேண்டும் என்றாலும் நமது குடும்பம் என்ற அடையாளத்தை என்றுமே விட்டுக்கொடுக்கக் கூடாது.

இதை வலியுறுத்தும் வகையிலேயே இவ்வாண்டு தீபாவளிக்கு மோனோகுரோம் வலைத்தள குறும்படத்தை பெட்ரோனாஸ் வெளியிட்டுள்ளது. அனைத்து மலேசியர்களுக்கு ஒரு நினைவூட்டலாக இது அமைகிறது என்று ஜக்காரியா கூறினார். இந்த நன்னாளில் நமக்குள் இருக்கும் ஒளியின் பிரகாசத்தை எதைக்கொண்டும் அணைப்போட முடியாது என்பதை நினைவில் கொள்வோம்.

பெட்ரோனாஸின் மோனோகுரோம் குறும்படத்தை பெர்ட்ரோனாஸ் சமூக வலைத்தள சேனல்களில் இப்போதிருந்து பார்க்கலாம். இப்போது தொடங்கி வரும் நவம்பர் 7-ஆம் தேதி வரை தொலைக்காட்சியிலும் இது ஒலிபரப்பப்படும். 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img