img
img

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் அறிவித்திருப்பது மற்றொரு நாடகம் அரங்கேற்றம்.
செவ்வாய் 18 அக்டோபர் 2016 13:41:12

img

மலேசிய இந்திய சமுதாயம் பொருளாதார மீட்சி பெற புதிய மேம்பாட்டுத் திட் டத்தைத் தீட்ட இருப்பதாக மஇகா மேடையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் அறிவித்திருப்பது மற்றொரு நாடக அரங்கேற்றமாகும். முழுக்க முழுக்க ஒரு கண் துடைப்பு நாடகமாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. கடந்த 13-ஆவது பொதுத் தேர்தலின்போது ’நம்பிக்கை’, நம்பிக்கை என்று சொல்லிக் கொண்டே அறிவித்த வெற்று அறிவிப்புகளைப் போலதான் இதுவும் என்று ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவர் பொன். வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தைப் போல அல்லாமல், இந்த முறை அறிவிக்கப் படும் திட்டம் முறையாக நிறைவேற் றப்படுவதற்கு ஏதுவாக ஒரு செயலகம் நிறுவப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.இதே நஜீப், ஹிண்ட்ராஃப் இயக்கத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்போது, கடந்த 40 ஆண்டுகளாக இந்திய சமுதாயம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் இதற்காக இந்திய சமுதாயத்திடம் பொது மன்னிப்பு கேட்பதாகவும் பகிரங்கமாக அறிவித்தார். அத்துடன், ’என் நம்பிக்கை’ முழக்கத்தை-கொள்கையை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு அளிக்கும்படியும் அந்த நேரத்தில் நஜீப் கெஞ்சினார். நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் பிரதமர் துறை துணை அமைச்சராகவும் நான் பொறுப்பு வகித்த காலத்தில், நீங்கள் ஒத்துக் கொண்ட திட்டங்களை நடைமுறைப் படுத்தும்படி பல முறை நினைவு படுத்தியும் பிரதமர் ஒன்றும் செய்ய வில்லை. அவர், செய்ததெல்லாம், என்னை காத்திருக்கும்படி கேட்டுக் கொண்டதுதான்.திட்டங்களை நிறைவேற்றுவதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதாக நஜீப் சொல்வதிலெல்லாம் உண்மை யில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமே என்ற கடப்பாடு அவரிடம் இல்லை என்பதுதான் உண்மை. அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி அரசு மலேசிய இந்திய சமுதாயத்தை சமூக - பொருளாதார ரீதியில் முன்னேற்றத் தவறிவிட்டது என்பதற்காக பொது மன்னிப்பு கேட்டிருக்கிறீர்கள் என்பதை பலமுறை நினைவு படுத்தியும் நஜீப் கண்டுகொள்ளவில்லை. தேசிய முன்னணி அரசால் புறக்கணி க்கப்பட்ட இந்திய சமுதாயம் மேம்பாடு காண, குறிப்பாக, குடியுரிமைச் சிக்கலை எதிர்நோக்கி இருக்கும் ஏறக்குறைய மூன்று இலட்ச இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சினையைக் களைய தனிப்பட்ட முறையில் நான் வைத்த கோரிக்கைக்கு செவிசாய்க்க ஆளுந்தரப்பில் ஒருவருமில்லை. அதனால், அமைச்சரவையின் கவனத்திற்கும் இந்த சிக்கல் இதுவரை எட்டவில்லை. அதைப்போல, தோட்டங்களில் இருந்து நகர்ப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்த சுமார் 8 இலட்சம் தொழிலா ளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு இன்றுவரை தீர்வு இல்லாததைப் போல, உயர்கல்வி நிலையங்களிலும் வேலை வாய்ப்பிலும் இந்திய சமுதாய மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற கோரிக்கையும் கவனிப்பாரற்று கிடக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் ஹிண்ட்ராஃப் இயக்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் இந்திய சமுதாயத்திற்கு அளித்த வாக்குறு தியைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, இப்பொழுது மீண்டும் ஒரு வாக்குறுதியா என்று ஹிண்ட்ராஃப் இயக்கம் வியப்படைந்துள்ளது. ஏறக்குறைய அடியோடு முடங்கிவிட்ட மஇகா-வைப்போல மற்ற இந்திய கட்சிகளின் ஆண்டுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு, ஆளுயர மாலைகளை அணிந்து கொண்டு ஆண்டுதோறும் வாக்குறு திக்கு மேல் வாக்குறுதி அளிப்பது நஜீப்பிற்கு வாடிக்கையா கிவிட்டது. அம்னோவிற்கும் அதன் தலை மையிலான தேசிய முன்னணிக்கும் ஹிண்ட்ராஃப் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறது. இந்து தர்மத்தின்படி, நம்பிக்கை மோசடியைப் போல இன்னொரு மோசடி உலகில் இல்லை. எனவே, கர்ப்பனைக்கு எட்டாத அளவில் பாதிக்கப்படும் இந்திய சமுதாய மக்களை இப்படியே காலமெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்று ஹிண்ட்ராஃப் இயக்கம் எச்சரிக்கிறது என்று வழக்கறிஞருமான வேத மூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img