ஜொகூர் மாநில சட்டமன்றத்தில் தேசிய முன்னணியின் ஆதரவு மூன்றில் இரண்டு பெரும்பான்மை குறைந்ததை தொடர்ந்து அந்த தென் மாநிலத்தில் திடீர் தேர்தல் விரைவில் நடத்தப்படலாம் என்று ஆரூடம் தற்போது வலுத்து வருகிறது. எனினும் திடீர் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியத்தை மாநில மந்திரிபுசார் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் வன்மையாக மறுத்துள்ளார். இது தனிநபர்கள் அல்லது ஒரு கும்பல் வேண்டுமென்றே பரப்பி வருகின்ற வதந்தியாகும் என்று அவர் குறிப்பிட்டார். இவ்வாறு வதந்தி பரப்பி வரும் தரப்பில் நான் நிச்சயம் இல்லை. அப்படியொரு திடீர் தேர்தலை நடத்துவற்கான நோக்கத்தை மாநில தேசிய முன்னணி கொண்டிருக்கவில்லை என்றும் அவர் விளக்கினார். தற்போது ஜொகூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தொடர்ந்து மாநிலத்தில் திடீர் தேர்தல் நடத்தப்படும் என்று ஆரூடங்கள் தற்போது பலமாக வீசி வருகின்றன. மாநில தேசிய முன்னணியும் எதிர்க்கட்சியும் இந்த திடீர் தேர்தலுக்கு மிக ஆர்வமாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஜொகூரில் திடீர் தேர்தல் நடத்தப்படுவதற்கான பரிந்துரைக்கு மாநில அம்னோ தங்கள் ஆதரவை தெரிவித்து வருவதாக பூலாய் நாடாளுமன்ற உறுப்பினரும் உள்துறை துணை அமைச்சருமான டத்தோ நூர் ஜஸ்லான் அண்மையில் கூறியிருந்தார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மாறுபட்ட நிலையில் முன்கூட்டியே திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஜொகூர் மாநிலம் தேசிய முன்னணியின் கோட்டையாகும். எனவே எங்களின் பலத்தை சோதித்துப் பார்ப்பதற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த தயாராகி வருகிறோம் என்று நூர் ஜஸ்லான் தெரிவித்து இருந்தார். அவ்வாறு மாநிலத்தில் திடீர் தேர்தல் நடத்தப்படுமானால் அதனை எதிர்நோக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் மாநில ஜ.செ.க. தலைவர் லியூவ் சின் தோங்கும் அறிவித்து இருந்தார். அண்மையில் தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், அதிலிருந்து விலகி டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜொகூர் மாநிலத்தில் தேசிய முன்னணி மொத்தம் 38 இடங்களை கொண்டு இருந்தது. தற்போது 37 ஆக குறைந்துள்ளது. அதேவேளையில் எதிர்க்கட்சி கொண்டுள்ள 18 இடங்கள் 19 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்