img
img

நீலாய், இம்பியானில் குடிநீர் துண்டிப்பு!
செவ்வாய் 18 அக்டோபர் 2016 13:37:06

img

பத்தாங் பெனார் தோட்ட மேம்பாடு காரணத்தால் அங்கு வேலை செய்த தோட்டத் தொழிலாளர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென குடிநீர் துண்டிக்கப்பட்டதால் 40 இந்திய குடும்பங்கள் பெரும் பரிதவிப்புக்குள்ளாயின. நேற்று மதியம் 2.00 மணியளவில் நீலாய், இம்பியான் அடுக்குமாடி குடியிருப் பில் குடிநீர் துண்டிக்கப்பட்டதை அறிந்து அங்கு விரைந்த நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜ.அருள்குமாரிடம் அவர்கள் புகார் கூறினர். சைம் டார்பி நிறுவனம் தொழிலாளர்களுக்கு கட்டிக் கொடுத்த இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வர்த்தக அடிப்படையில் தண்ணீர் கட்டணம் மாதம் வெ.150 முதல் வெ.250 வரை வசூலிப்பதுடன் பல சேவை கட்டணத்திற்கு வெ.24,300 மொத்தமாக செலுத்த வேண்டுமென நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக ஜ.அருள்குமார் விளக்கினார். குடியிருப்புக்கு வழங்கப்படும் வழக்கமான விலையில் குடிநீர் கட்டணம் தருவதற்கும் தேவையில்லாத சேவை கட்டணத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தி குடியிருப்புவாசிகளுக்கு நெருக்குதல் கொடுத்து பெரும் சுமை ஏற் படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென தலைநகரிலுள்ள சைம் டார்பி நிறுவன தலைமையகத்தில் நேரடியாக புகார்கள் கொடுத்து 7 மாதங்களுக்கு மேல் ஆகியும் மௌனமாக இருந்து விட்டு திடீரென தீபாவளி சமயத்தில் குடிநீரை துண்டிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார் அவர். தொழிலாளர்களுக்கு 40,000 வெள்ளிக்கு விற்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள வீடுகள் தற்போது சேவைக் கட்டணமே வெ.24,000த்திற்கு மேல் உயர்ந்திருப்பதுடன் குடிநீர் கட்டணமும் விருப்பத்திற்கு ஏற்றி மிரட்டும் நிலைக்குள்ளாகி இருப்பதாக அடுக்குமாடி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த வேலாயுதம் த/பெ பொன்னுசாமி (வயது 63) வேதனையுடன் கூறினார். பரபரப்பாக தீபாவளியை வரவேற்று பலகாரங்களை ஏற்பாடு செய்யும் ஆவலுடன் இருக்கும் வேளையில், திடீரென குடிநீரை துண்டிப்பது இங்குள்ள 40 இந்திய குடும்பங்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் கொடுத்திருப்பதாக அந்தோணியம்மா த/பெ கருப்பன் (வயது 69). கீதா த/பெ மாரிமுத்து (வயது 49), கிருஷ்ணன் (வயது 50) ஆகியோர் தெரிவித்தனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img