பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) ஆறு விழுக்காட்டிலிருந்து மூன்று விழுக்காடாக குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டதை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் அப்துல் ரசாக் நிராகரித்தார். ஜி.எஸ்.டி. யால் உள்நாட்டுப் பயனீட்டு அளவு குறைந்துள்ளது என்று கூறி அதைக் குறைக்க வேண்டும் என்று குளுவாங் ஜ.செ.க. நாடா ளுமன்ற உறுப்பினர் லியூ சின் தோங் மக்களவையில் நேற்று ஒரு பரிந்துரையை முன்வைத்தார். மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சியை கருத்தில் கொண்டு வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2017 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி. வரியை 6 விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்று நிதி அமைச்சருமான நஜீப்பை கேட்டுக்கொண்டார். எனினும் ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சியினரின் எதிர்மறையான கருத்து என்று நஜீப் பதிலளித்ததும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ஆதரவு தெரி வித்தார்கள். ஜி.எஸ்.டி. இல்லையேல் மலேசியப் பொருளாதாரம் முடங்கிப் போகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்