(ஹேமா எம்.எஸ்.மணியம்) கூலிம்,
கெடா லூனாஸ் வெல்லெஸ்லி தோட்ட மாணவர்கள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி கனடாவில் நடைபெற்ற புத்தாக்க அறிவியல் போட்டியில் பங்கேற்று ஒரு தங்கம் மற்றும் 3 சிறப்பு விருதுகளைப் பெற்றிருப்பதாக வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சு.இராமலிங்கம் தெரிவித்தார்.
கடந்த வாரம் 28.8.2018 ஆம் தேதி கூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன் லூனாஸ் வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளியிலிருந்து 4 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் கனடா புத்தாக்க அறிவியல் போட்டிக்குச் சென்றனர். அம்மாணவர்கள் ச.மோனிஸ், மு.முகிலன், க.நிஷா ஸ்ரீ மற்றும் ச.ஸ்ரீஷிவாணி ஆவர்.
மேலும், இவர்களுடன் ஆசிரியர்கள் ஞானஜோதி, சு.விஜயா ஆகியோரும் உடன் சென்றனர். டொரான்டோ அனைத்துலக புத்தாக்க அறிவியல் போட்டியில் செம்பு, பித்தளை பொருட்களை வெண்மையாக்கும் திரவியக் கண்டுபிடிப்பு இப்புத்தாக்க போட்டியில் சோதனைக்கு வைக்கப்பட்டது.
மேலும், புதிய கண்டுபிடிப்புக்காக லூனாஸ் வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு 1 தங்க விருதும் 3 சிறப்பு விருதுகளும் கனடா புத்தாக்க அறிவியல் போட்டியில் வழங்கப்பட்டது. அதில் 2 சிறப்பு விருதுகள் கண்டுபிடிப்புக்காகவும் மற்றொரு விருது போலந்து வழங்கியதாகவும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் குறிப்பிட்டனர்.
மலேசியாவில் இருக்கும் தமிழ்ப்பள்ளிகளிலே இப்பள்ளியே 19 மணி நேரம் செலவு செய்து டொரான்டோ அனைத்துலக புத்தாக்க அறிவியல் போட்டி யில் கலந்துகொண்டு தமிழ்ப்பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது.
தொடர்ந்து, இவர்கள் கனடாவில் அனைத்துலக போட்டியில் கலந்துகொள்வதற்கான 55 ஆயிரம் வெள்ளி செலவுகளை வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்ப ள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், வாரியக் குழு, பெற்றோர்கள் ஆகிய அனைவரும் இந்நிதியைத் திரட்டி மாணவர்களை கனடாவிற்கு அனுப்பியதாக தெரி விக்கப்பட்டது.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்