தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூரில் இருந்து மருத்துவர்கள் நேற்று அப்போலோ வந்துள்ளனர். சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்து செல்லும் நிலையில் ஜெயலலிதா உடல்நிலை உள்ளதா? என்று பரிசோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டனிலிருந்து சிறப்பு மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து டில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் முதல்வரின் உடல் நிலையை பரிசோதித்தனர். இன்று வரை அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் பெண் மருத்துவர்கள் சிகிச்சை: இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் உள்ள பிரபலமான மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து 2 பெண் மருத்துவர்கள் நேற்று அப்பல்லோ வந்தார்கள். இரு வரும் பிசியோதெரபி அளிப்பதில் உலகப் புகழ் பெற்றவர்கள். ஜெயலலிதாவுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பற்றி அறிந்து அடுத்த கட்டமாக செய்ய வேண்டிய பயிற்சிகளை வழங்க உள்ளனர். அதன்படி அவர்கள் ஜெயலலிதாவை பரிசோதனை செய்து அப்போலோவிலேயே சிகிச்சை அளிக்க முடியுமா அல்லது சிங்கப்பூர் அழைத்து செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்