img
img

மஇகாவில் மறுபடியும் அனைவரையும் ஒன்றிணைய வைப்பேன்!
திங்கள் 17 அக்டோபர் 2016 13:09:22

img

அம்னோ எதிர்நோக்கி வந்த உள்கட்சி பிரச்சினைகளைப் போன்று ம.இ.காவும் பல பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளது. ம.இ.கா 5 முறை நீதிமன்ற வாசலைத் தொட்ட போதிலும், அனைத்துச் சவால்களையும் இன்னல் களையும் கடந்து மீண்டு வந்துள்ளோம். இந்திய மக்களின் நலன் கருதி ம.இ.கா மீண்டும் ஒருங் கிணைக்கப்பட்ட முறையில், ம.இ.காவோடு பிணக்கு கொண்ட அனைத்துத் தரப்பினரும் மீண்டும் கட்சியோடு இணைந்து சேவையாற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் நான் தற்பொழுது மேற்கொண்டு வருகின்றேன் என்று மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ். சுப்பிரமணியம் நேற்று அறிவித்தார். அவரின் உரையிலிருந்து சில விஷயங்கள் வருமாறு: ‘கடந்த 2009ஆம் ஆண்டுத் தொடங்கி நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற காலந்தொட்டு டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இந்திய சமுதாயத்தினர் விரும் பக்கூடியவராகவும் மிகவும் நெருக்கமான தோழராகவும் இருந்து வரு கிறார். இதற்கு முன்னதாகப் பதவி வகித்து வந்த நாட்டின் முன்னாள் பிரதமர்கள் யாரும் செய்யாத அளவில், பதவி வகித்து வந்த கடந்த 7 ஆண்டு களில் இந்திய சமுதாயத்தினரின் மேம்பாட்டிற்கு அதிகமான உதவிகளைத் தற்போதைய பிரதமர் வழங்கியுள்ளார்’. 14-ஆவது பொதுத்தேர்தல் சவால்கள் ‘இதற்கு முன்னதாக எதிர் கொண்ட தேர்தலைக் காட்டிலும் வரக்கூடிய 14-ஆவது பொதுத் தேர்தல் நமக்கு மாபெரும் சவால்கள் நிறைந்ததாகும். நாட்டின் விடைபெற்ற பிரதமர்களில் ஒருவரும் முன்னாள் துணைப் பிரதமரும் எதிர்கட்சியினருடன் கூட்டுச் சேர்ந்து, நாட்டின் தலைமைத்துவத்தையையும் தேசிய முன்னணியின் ஆட்சி யையும் வீழ்த்துவதற்குச் செயல்பட்டு வருகின்றனர். சவால்கள் அனைத்தையும் சமாளித்துச் சிறந்த தலைமைத் துவத்தின் வழியே முன்னோக்கிச் செல்வதோடு, பூகிஸ் போர் வீரரின் பரம்பரையைச் சார்ந்த பிரத மர் தளபதியாக முன்னின்று போரினை எதிர்கொள்ளத் தயாராக நம்மிடையே இருக்கின்றார். தேசிய முன்னணி கொண்டிருந்த வசந்த காலத்தை நாம் மீண்டும் கொண்டு வருவதற்கு நம்மி டையே உருமாற்றம் ஒன்று அவசியமாகின்றது. அனைவரும் பங்காற்றுகின்றனர் ‘இந்நாட்டில் ஒவ்வோர் இனத் தவரும் அதாவது எண்ணிக்கை ரீதியில் அதிகம், குறைவு என்றில்லாமல் அனைவரும் அரசியல் களத்தில் முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றனர். அதன் அடிப்படையில், நம் முன் னோர்களும் அரசியல் தலைவர்களும் கொண்டிருந்த அதே ஒற்றுமையுணர்வுடனும் உத்வேகத்துடனும் நாம் அனைவரும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். 14-ஆவது பொதுத்தேர்தலில் கிராமப்புறங் களில் நம்முடைய வலுத்தன்மை நிலையாக உள்ள வேளையில், தீவிர போட்டிகள் ஏற்படக்கூடிய நகர்புற தொகுதிகளில் நமது அரசியல் இயந்திரத்தை வலுப்படுத்த வேண்டும்.’ 11 அம்ச திட்டம் ‘ம.இ.கா முன்னமே வகுத்துள்ள சமுதாய வளர்ச்சிக்கான 11 அம்சத் திட்டங்களின் வழி பல ஆக்கக ரமான நிகழ்ச்சிகளை மேற் கொண்டு சமுதாயத்தோடு அணுக்கமான உறவை ஏற்படுத்தி வருகின்றது. இன்றைய இளைய சமுதாயம் கல்வியிலும் பொரு ளாதாரத்திலும் ஒருங்கிணைக் கப்பட்ட முறையில் வெற்றி காண்பதன் அவசியத்தை எடுத்துரைப்ப தோடு பல இளம் இந்திய தொழில்முனைவர்க ளையும் உருவாக்க வேண்டுமென் பதே எங்களது தலையாய நோக்கமாகும்.’ இந்திய சமுதாயம் தொடர்பான திட்டங்களில் நேரடி தலையீடுகள் நாட்டின் கடந்த 8 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், பிரதமர் அவர்கள் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி, சிறுகடனுதவி திட்டம், தொழில் திறன் வாய்ப்புகள் போன்றவற்றில் இந்தியர் களுக்குச் சிறப்பு ஒதுகீட்டினை வழங்கியுள்ளார். இந்த உதவிகள் அனைத்திற்கும் டத்தோஸ்ரீ அவர்களுக்கு மீண்டும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுநாள்வரையில் இந்திய சமுதாய விவகாரங்களில் பிரதமரின் நேரடி தலையீட்டுத் திட்டங்கள் அனைத்தும் இனி நிரந்தரமான திட்டமாக உரு மாற்றம் காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.’ இந்திய வியாபாரிகளுக்கு நிதி இந்திய வியாபாரிகளுக்காக 500 கோடி வெள்ளி பெருமளவில் சிறுகடன் சுழல் நிதித்திட்டம் ஒன்று தோற்றுவிக்கப்பட வேண் டுமென கேட்டுக் கொள்கிறேன். தற்பொழுது, இந்திய வியாபாரி களுக்காக ரிங்கிட் மலேசியா 250 கோடி கடனாக வழங்கப்பட்டு, மாதம் 50 கோடி முதல் 60 கோடி வரை திரும்பப் பெறப்பட்டு வருவதை நான் அறிவேன். அதனை நல்லதோர் ஆரம்பமாகக் கொண்டு இந்த 500 கோடி சிறுகடன் சுழல் நிதித் திட்டம் தொடங்கப்படுவதில் எவ்வித இடையூறுகளும் ஏற்படு வதற்கு வாய்ப்பில்லை. மாறாக, இஃது இந்திய வியாபாரிகளின் கடனு தவிப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வாகவும் அமையும்.’ நிலுவையில் உள்ள பிரச்சினைகள் ‘பல ஆண்டுகளாக நாட்டில் நிலவி வரும் பல பிரச்சினை களுக்கு இன்றுவரையில் நிரந்தர தீர்வுகள் காணப் படவில்லை. இதற்கு அரசாங்கத்தின் கொள்கை முறைகள் ஒரு முக்கியத் தடைக் கல்லாக இருந்து வருகின்றது. ஒவ்வோர் ஆண்டும் ம.இ. காவின் பொதுப்பேரவையில் இது தொடர்பான தீர்மானங்கள் சமர்ப் பித்து ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆண்டுகள் கடக் கின்றன. ம.இ.காவில் தேசியத் தலை வர்கள் மாறிய போதிலும் இதற்கான தீர்வுகள் ஏற்படவில்லை. மத்திய அரசில் வேலை வாய்ப் புகள் திருப்தியளிக்காத நிலையில் மாநில அரசாங்கம், நகராண்மைக் கழகம் நிலையில் இந்நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. தீபகற்ப மலேசியாவில் இதுவரை யில் மாவட்ட அதிகாரியோ நகராண்மைக்கழக தலைவராகவோ பூமிபுத்ரா அல்லாதவர்கள் ஒருவர்கூட நியமிக்கப்பட வில்லை என்பது இங்குக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கடந்த போதிலும் பொதுச் சேவைத் துறையில் இன்னும் நிலையான இலக்கை நாம் அடையவில்லை. இந்திய தொழில் முனைவர்களுக்கு அரசாங்க குத்தகைகள் ‘இந்திய சமுதாயத்தினரி டையே தொழிலதிபர்களை உருவாக்க வேண்டுமாயின் சிறுதொழில் வியாபாரிக ளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப் பட வேண்டும். அரசாங்கக் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டில் இருக்கக்கூடிய குறிப் பாக, சிறுதொழில், நடுத்தர வியாபாரம் செய்யும் இந்திய இளைஞர்கள் அரசாங்கக் குத் தகை வாய்ப்புகளைப் பெறுவதில் சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.’ கடந்த ஆண்டு டத்தோஸ்ரீ அவர்களால் 2016ஆம் ஆண்டுக் கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு ஒதுக் கீட்டின் கீழ், தமிழ்ப் பள்ளிகளின் சிறு சிறுமேம் பாட்டுத் திட்டங் களுக்கான வாய்ப்புகள் இந்திய குத்தகையாளர்களுக்கு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இருந் ப் போதிலும், இவ்விவகாரத்தில் சம்மந்தப் பட்ட இலாகா கல்விய மைச்சுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை யில் இந்தியர்கள் அரசாங்ககுத்தகைகளில் பங் கேற்கமுடியாத அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நிதியமைச்சின் துணை யோடு இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு எனக்குச் சுமார் 6 மாத கால அவகாசம் தேவைப் பட்டது. அவ்வகையில், அரசாங் கக் கொள்கை மாற்றங்களால் மட் டுமே இப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைக் கொண்டு வர முடியும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img