சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட தயாராக இருந்த விமானத்தை இயக்குவதற்கு முன்பு விமானி சோதனை செத போது தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் 152 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு நேற்று அதிகாலை ஏர்-இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் 152 பயணிகள் ஏறி அமர்ந்து இருந்தனர். விமானத்தை இயக்குவதற்கு முன்பு விமானி சோதனை செத போது விமான இயந்திரத்தில் கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே ஊழியர்கள் வந்து இயந்திர கோளாறை சரி செயும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கோளாறு உடனடியாக சரி செயப்படவில்லை. இதனால் பயணிகள் 3 மணி நேரம் காத்து கிடந்தனர். இதையடுத்து மாற்று விமானம் 10.30 மணிக்கு அந்தமான் செல்லும் என்று பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பே விமானி சாமர்த்தியமாக இயந்திர கோளாறை கண்டுபிடித்ததால் அசம்பா விதம் தவிர்க்கப்பட்டது. இதனால் 152 பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்