இந்த ஆண்டின் இறுதி நாடாளுமன்ற கூட்டம் இன்று தொடங்கி நவம்பர் 24 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த கூட்ட தொடரில் பாஸ் கட்சியின் சர்ச்சைக் குரிய ஹூடுட் சட்ட மசோதா முழுமையாக தாக்கல் செய்யப்படவிருப்பதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இக்கூட்டத் தொடரில், வரும் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை , பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் 2017 -ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யவிருக்கிறார். எனினும், அதனை விட பாஸ் கட்சியின் சர்ச்சைக்குரிய மசோதா நாட்டில் எல்லா இனத்தவர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது என்று திட்டவட்டமாக கூறலாம்.கடந்த நாடாளுமன்ற கூட்ட தொடரில் பாஸ் கட்சி திடீரென ஹூடுட் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது தேசிய முன்னணி கட்சிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. இது, நெருக்கடியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள வேளையில், இந்நிலை நீடித்தால் தேசிய முன்னணி கூட்டணி உடையுமா? என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. காரணம், சர்ச்சைக்குரிய ஹூடுட் சட்ட மசோதாவை நாடாளுமன்றம் அங்கீகரித்தால் சபா, சரவா மாநிலங்கள் தனித்துச் செயல்பட நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த 1963-ஆம் ஆண்டில் மலேசியா அமைக்கப்பட்டது முதல் இது வரையில் பேணப்பட்டு வந்த நல்லிணக்கம், ஒற்றுமை, புரிந்துணர்வு ஆகியன இந்த ஹூடுட் சட்டத்தால் சீர்குலைத்து விடும். பாஸ் கட்சித் தலைவர் முன் வைத்துள்ள இத்தீர்மானம் விவாதத் திற்குப்பின் சட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டால் அது மக்களின் குறிப்பாக சபா - சரவா மக்களின் மனங்களைப் பெரிதும் பாதிக்கச் செய்யும் அப்போது எச்சரிக்கப்பட்டது. அவரின் இந்த எச்சரிக்கை தேசிய முன்னணிக்கு பெரும் மிரட்டலாகவே அமையும். காரணம் சபா, சரவா பிரிந்தால் தேசிய முன்னணி தனது ஆட்சியை இழக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்.கிளாந்தானில் ஹூடுட் சட்டத்தை கொண்டு வருவதற்கு பாஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இறுதியில் அம்னோவின் உதவியோடு நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தனி நபராக தாக்கல் செய்துள்ளது தேசிய முன்னணி தோழமைக் கட்சிகள் உட்பட எதிர்க்கட்சிகளிடையே பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாஸ் கட்சியின் இந்நடவடிக்கையினால் தேசிய முன்னணியின் 3 முக்கிய தோழமைக் கட்சிகள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள வேளையில், பாஸ் கட்சி தாக்கல் செய்துள்ள அந்த ஹூடுட் சட்டம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் தாங்கள் பதவி விலகப் போவதாக அக்கட்சிகளின் தலைவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர். மேற்கண்ட இந்த மசோதா நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் தாங்கள் பதவி விலகப் போவதாக மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய், கெராக்கான் தலைவர் டத்தோஸ்ரீ மா சியூவ் கியோங், மஇகா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம் ஆகியோர் அதிரடியாக அறிவித்துள்ளது தேசிய முன்னணியின் அரசியல் வானில் பெரும் கலக்கத்தையும், நெருக்கடியான சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. பழம்பெரும் அரசியல் கூட்டணியாக விளங்கி வரும் தேசிய முன்னணிக்கு இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலை இதுவரை ஏற்பட்டதே இல்லை. தேசிய முன்னணிக்கு ஏற்பட்டுள்ள இந்நிலை மிகவும் மோசமான ஒரு சூழ்நிலை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.ஆகக் கடைசியாக இருந்த அந்த சட்ட மசோதாவை முன்கூட்டியே தாக்கல் செய்வதற்கு பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான் முன்மொழிந்திருப்பது, அம்னோவும் பாஸ் கட்சியும் கூட்டு சேர்ந்தே இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது தேசிய முன்னணி தோழமைக் கட்சிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இப்பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வு காணா விட்டால் நாட்டில் பெரும் சக்தி வாய்ந்த கூட்டணியாக திகழ்ந்து வந்த தேசிய முன்னணி உடையும் அபாயத்தை எதிர்நோக்கலாம்.அது நாட்டின் அரசாங்க நிர்வாகம் உட்பட நாட்டின் அரசியல் தலைவிதியையே மாற்றி தேசிய முன்னணியின் அமைக்கும் நிலையை ஏற்படுத்தி விடலாம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தேசிய முன்னணி தோழமைக் கட்சிகளைத் தவிர்த்து,பாஸ் கட்சியுடன் பங்காளித்துவம் கொண்டிருந்த ஜனநாயக செயல் கட்சியும் இதற்கு பெரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அரசியல் லாபத்திற்காக தேசிய முன்னணியும், பாஸ் கட்சியும் கூட்டு சேர்ந்து இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளதாக ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் குற்றம் சாட்டினார். பாஸ் கட்சியால் தனிப்பட்ட முறையில் தாக்கல் செய்யப்பட்ட ஹடுட் ஷரியா இஸ்லாமிய சட்ட திருத்த மசோதா தேசிய முன்னணியை அழிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இது ஒரு கடுமையான விவகாரமாகும். எனவே, இவ்விவகாரம் குறித்து அரசாங்கமும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் விவாதிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.மலேசியாவிலுள்ள சிறுபான்மை சமூகத்தை தேசிய முன்னணி பிரதிநிதிப்பதாக இருந்தாலும், அனைத்து கட்சிகளின் நலனையும் அது பாதுகாப்பது அவசியமாகும் என்றார். - தி மலேசியன் டைம்ஸ்
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்