img
img

பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைவு!
வெள்ளி 14 அக்டோபர் 2016 17:10:34

img

பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து கேண்டீன் கட்டுமானத்தை தரைமட்ட மாக்கிய வின்தெஜ் நிறுவனத்திற்கு எதிராக பெற்றோர்கள் நேற்று ஆட்சேப மறியலில் குதித்தனர். 59 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாடாங் மேவா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் இணை சிற்றுண்டி சாலையின் கட்டுமானப் பணி கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த இணை சிற்றுண்டி சாலை கட்டுவதற்கு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் டத்தோ என்.எஸ். இராஜேந்திரன் முயற்சியில் 1 லட்சம் வெள்ளி மானியம் பெற்று தரப்பட்டது. இந்நிதியைக் கொண்டு சிற்றுண்டி சாலையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. தூண்கள், சுவர்கள் எழுப்பப்பட்ட நிலையில் இந்த இணை சிற்றுண்டி சாலை கட்டடத்தை வின்தெஜ் மேம்பாட்டு நிறுவனத்தினர் இடித்து தரைமட்ட மாக்கினர். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பூட்டப்பட்ட நிலையில் இருந்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து அம்மேம்பாட்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அக்கட்டடத்தை இடித்துள்ளனர் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமை செயலாளர் எஸ். சுதாகர் நேற்று கூறினார். இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் வேளையில் இரண்டு நாட்களுக்கு முன் அந்த மேம்பாட்டு நிறுவனம் தனது வழக்கறிஞர்கள் மூலம் பள்ளி தலைமையாசிரியருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. பள்ளியின் நிலம் எங்களுக்கு சொந்தமானது. அருகில் உள்ள நிலத்தையும் நாங்கள் வாங்கி விட்டோம். இதனால் பள்ளியை சுற்றி யுள்ள பாதுகாப்பு சுவர்களை இடிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் அம்மேம்பாட்டு நிறுவனம் குறிப் பிட்டிருந்ததை கண்டு தலைமையாசிரியர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினார். இக்கடிதம், மேம்பாட்டு நிறுவனத்தின் அத்துமீறிய செயலை கண்டிக்கும் வகையில் இந்த ஆட்சேப மறியலை நாங்கள் நடத்தினோம். பள்ளியின் வாரியக்குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர்கள் சங்கம், பெற்றோர்கள் என 200க்கும் மேற்பட்டோர் இம்மறியலில் கலந்து கொண்டனர் என்று சுதாகர் செய்தியாளர் களிடம் கூறினார். பாடாங் மேவா தமிழ்ப்பள்ளி அரசாங்க பள்ளியாகும். பள்ளியில் அரசாங்கத்திற்கு சொந்தமாகும். ஆனால் இந் நிலம் எங்களுக்கு சொந்தம் எனக் கூறி வின்தெஜ் நிறுவனத்திற்கு கட்டடங்களை இடிக்கும் உரிமையை யார் வழங்கியது. இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று அவர் கேள்வி எழுப்பினார். ஏற்கெனவே 6க்கும் மேற்பட்ட மேம்பாட்டு நிறுவனங்கள் இப்பள்ளி நிலத்தை சொந்தம் கொண்டாடி பிரச்சினைகளை எழுப்பின. தற்போது வின்தெஜ் நிறுவனம் ஒரு படி மேல் சென்று அரசாங்க நிதியில் கட்டப்பட்ட இணை சிற்றுண்டி சாலையை உடைத்துள்ளனர். இந்நிறுவனத்தின் செயலால் பள்ளி ஆசிரியர்கள் உட்பட மாணவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்று அவர் கூறினார். பாடாங் மேவா தோட்டப் பாட்டாளிகளுக்கு வெ.65 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அலோர்ஸ்டார் நீதிமன்றம் மேம்பாட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று இதுநாள் வரை எந்தவொரு மேம்பாட்டு நிறுவனமும் இழப்பீடு நிதியை வழங்கவில்லை. தற்போது பள்ளி நிலத்திற்கு உரிமை கொண்டாடும் வின்தெஜ் மேம்பாட்டு நிறுவனம் தோட்டப் பாட்டாளிகளுக்கு இழப்பீட்டு பணத்தை தருவதற்கு தயாரா என்று சுதாகர் கேள்வி எழுப்பினார்.மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மலேசிய மக்கள் சக்தி கட்சியினர் 50 ஆயிரம் வெள்ளி செலவில் பள்ளியை சுற்றி தடுப்பு சுவரை கட்டித் தந்தனர். இதற்கு முன் இருந்த மேம்பாட்டு நிறுவனத்தின் அனுமதியுடன் தான் இந்த சுவர் எழுப்பப்பட்டது. ஆனால் இன்று அதை இடிக்கப் போவதாக வின்தெஜ் நிறுவனத்தினர் மிரட்டியுள்ளனர். இப்படி அநாகரிக செயலில் ஈடுபட்டு வரும் அந்த மேம்பாட்டு நிறுவனத்தின் நடவடிக்கைகளை மலேசிய மக்கள் சக்தி கட்சியினர் இனியும் பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள். பாடாங் மேவா தோட்டத் தமிழ்ப்பள்ளியை காப்பாற்றுவதற்கு இறுதிவரை போராடுவதற்கு நாங்கள் தயாராக வுள்ளேம். பள்ளி கட்டடங்களை உடைத்த வின்தெஜ் நிறுவனம் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதே வேளையில் இழப்பீட்டு தொகையை கொடுக்க வேண்டும் என்று சுதாகர் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img