img
img

சோதி இழைக்கும் துரோகம்!
வெள்ளி 14 அக்டோபர் 2016 17:07:09

img

மஇகாவின் 70 ஆம் ஆண்டு பேராளர் மாநாடு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வேளையில் பழனி தரப்பின் மிகுந்த நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட டத்தோ எஸ். சோதிநாதன், கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்தின் விருப்பத்தின் பேரில் வழங்கப்படவிருப்பதாக கூறப்படும் கட்சி யின் தலைமைச் செயலாளர் பதவியை ஏற்பாரேயானால் அது பழனி தரப்புக்கு செய்யும் மிகப்பெரிய துரோ கமாகவே கருதப்படும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. மஇகாவில் பழனிக்கும் அவரின் தரப்பிற்கும் இழைக்கப்பட்டுள்ள துரோகத்தை முன்நிறுத்தியே கடந்த ஓராண் டுக்கு மேலாக நாங்கள் போராடிக்கொண்டு இருக்கும் வேளையில் பேராட்டத்தின் போர்குணத்தின் அர்த்தத்தை உணராமல் தங்க தாம்பாளத்தில் வைத்து வழங்கவிருக்கும் பொதுச் செயலாளர் பதவியை சோதி ஏற்பது மூலம் பழனிக்கு மட்டும் அல்ல அவரின் ஆதரவாளர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகவே கருதப்படும் என்று பழனியின் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கினால் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்படவிருக்கும் மஇகாவின் பேராளர் மாநாட்டில் பழனி தரப்பின் முக்கியத் தலைவர்களையும் தீவிர ஆதரவாளர்களையும் மறுபடியும் மஇகாவில் சேர்த்துக்கொள்வது குறித்து டாக்டர் சுப்பிரமணியம் முக்கிய அறிவிப்பு செய்யலாம் என்று எதிர்பார் க்கப்படுகிறது.பழனிக்கு அடுத்து அவரின் தரப்பில் முக்கியத் தலைவராக கருதப்பட்ட முன்னாள் உதவித் தலைவரும் முன்னாள் துணை அமைச்சருமான சோதிநாதனை மஇகாவின் முக்கிய பொறுப்புக்கு கொண்டு வருவது மூலம் பழனி தரப்பின் பெரும்பகுதி ஆதரவாளர்களை கட்சியில் மறுபடியும் இணைக்க முடியும் என்று டாக்டர் சுப்பிரமணியம் நம்பிக்கை கொண்டுள்ளார். அண்மையில் பிரதமர் நஜீப்புடன் சோதிநாதன் நடத்திய முக்கிய சந்திப்பில்கூட சோதியை மறுபடியும் மஇகா விற்கு கொண்டு வருவதும் அடங்கும். மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான சோதியை மஇகாவின் முக்கியப் பதவியில் இணைப்பது மூலம் பிளவுபட்டுக்கொண்டு இருக்கும் மஇகா உறுப்பினர்களை மறுபடியும் ஒன் றிணைக்க முடியும் என்பது நஜீப்பின் வியூகமாகும். சோதி மஇகாவில் இணைந்தால் அது பழனி ஆதர வாளர்களை கட்சிக்குள் இணைத்தது போல் ஆகும் என்பது நஜீப்பின் நம்பிக்கையாகும். அதேவேளையில் சோதியை கட்சிக்குள் இணைத்தால் அது தன்னுடைய தலைமையை மேலும் வலுப்படுத்திக்கொள்ள முடியும் என்பது டாக்டர் சுப்பிரமணியத்தின் எதிர்பார்ப்பாகும். இந்நிலையில் நாளை மறுநாள் நடைபெறும் மாநாட்டில் சோதியை தலைமைச் செயலாளர் பதவிக்கு நியமிப்பது குறித்து டாக்டர் சுப்பிரமணியம் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேவேளையில் சோதி தலைமைச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டால் அதனால் பழனி தரப்பில் குறிப்பாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமலிங்கம் தலைமையிலான தரப்பினர் மிகுந்த அதிருப்திக்கும் ஏமாற்றத்திற்கும் ஆளாவார்கள் என்பது நடப்பு உண்மையாகும். ஆனால், இதற்கு மேலாக டாக்டர் சுப்பிரமணியத்தின் தீவிர ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரிய பூகம்பம் வெடிக் கலாம் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய மற்றொரு கசப்பான உண்மையாகும் என்று மூத்த அரசியல்வாதி ஒருவர் கூறுகிறார். காரணம், சோதியின் வருகையை சுப்ராவின் தீவிர ஆதரவாளர்கள் குறிப்பாக உதவித் தலைவர் டி. மோகன், டத்தோ சரவணன் உட்பட அவர் தரப்பை சார்ந்தவர்களால் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். காரணம், சோதி எப்போதுமே ஒரே காலில் இரண்டு மாங்காய்களை அடிப்பவர் என்பது அரசியல் வட்டாரத் திற்கே தெரியும். சாமிவேலுவிடம் அரசியல் பயிற்சி எடுத்தவரான சோதி, கட்சிக்குள் நுழைந்தால் தங்களை எளிதாக விழுங்கி விடுவார் என்பதை மோகன் போன்றவர்கள் உணராமல் இல்லை. இதன் காரணமாகவே சோதியின் வரவை ஜீரணிக்க முடியாமல் தங்களின் கடும் எதிர்ப்பை டாக்டர் சுப்பிரமணி யத்திடம் பகிரங்கமாக தெரிவிக்க முடியாமல் மறைமுகமாக கட்சிக்குள் காட்டி வருகின்றனர் என்கிறார் அந்த மூத்த அரசியல்வாதி. சோதியை மறுபடியும் மஇகாவில் இணைப்பதற்கான வாய்ப்பு ஏற்படுமானால் பொதுத் தேர்தலில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிபோகலாம் என்று சுப்ராவின் தீவிர ஆதரவாளர்கள் திடமாக நம்புகின்றனர். ஆனால், சோதி மஇகாவிற்கு வந்தால் பழனியின் முக்கிய ஆதரவாளர்களை அவரால் கட்சிக்கு கொண்டு வர முடியும் என்று பிரதமருடனான சந்திப்பின் போது சோதி பெரிய அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வேளை வரும் மாநாட்டில் முக்கியப் பதவி எதனையும் சோதிக்கு தருவது குறித்து அறி வித்தால் அது தனது ஆதரவாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தும் என்பதையும் சுப்பிரமணியம் அறியாமல் இல்லை. ஆனால், மஇகா எதிர்நோக்கியுள்ள நடப்பு நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் தனது தலைமைத் துவத்தை வலுப்படுத்திக்கொள்வதற்கும் சில ஆதரவாளர்களை இழப்பதில் தவறில்லை என்று அரசியல் வாதிக்கே உரிய மனோதிடத்தை கொண்டிருக்க சுப்பிரமணியம் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img