குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினர் தமக்கு மாதந் தோறும் 20 லட்சம் வெள்ளி வழங்க முன் வந்தனர் என்று முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ மூசா ஹசான் தெரிவித்தார். இந்தத் தரப்பினர் தவறான நபரை அணுகியதாக இவர் குறிப்பிட்டார். தனக்கு வழங்க முன்வந்த 20 லட்சம் வெள்ளியினை நிராகரித்த இந்த முன்னாள் போலீஸ் படைத்தலைவர் குற்றச் செயல்களை துடைத் தொழிப் பதற்கு முழு வீச்சில் இறங்கினார். சூதாட்டம், விபச்சாரம், போதைப்பொருள், வட்டி முதலைகளின் நடவடிக்கை ஆகிய விரும்பத்தகாத நடவடிக் கைகளை மேற்கொள்ள அனுமதி தருமாறு இந்த தீய சக்திகள் எனக்கு வேண்டுகோள் விடுத்தன. தான் பதவியில் இருந்த காலத்தில் பழம்பெரும் குற்றவாளி முக்கிய புள்ளிகளை களையெடுத்துள்ளேன். தேசிய போலீஸ் படையில் ஊழலுக்கு இடம் இல்லை. எந்தவொரு திட்டமிடப்பட்ட குற்றச் செயலுக்கு எதிராக டான்ஸ்ரீ மூசா ஹசான் கண்டிப்பான கடுமையான அணுகுமுறையினை கொண்டிருந்தார். சந்தேகிக்கப்பட்ட ஏழு மலேசிய குண்டர் கும்பல் தலைவர்கள் கைது செய்தது இவர் காலத்தில் நிகழ்த்திய சாதனை.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்