சிப்பாங் சுங்கை பீலேக் கம்போங் பாருவில் வீற்றிருக்கும் தேவிஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்திற் கான நிலம் அண்மையில் சிலாங்கூர் மாநில அரசு பதிவேட்டில் கையகப்படுத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியக் குடும்பங்கள் வாழ்ந்துவரும் இப்பகுதியில் உள்ள ஆலயம் இங்குள்ள சீனருக்கு சொந்தமான நிலத்தில் இருந்ததாகவும் பின்னர் அவர் அந்நிலத்தை மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்கும்போது ஆலயம் வீற்றிருந்த நிலத்தை ஒதுக்கிவிட்டு எஞ்சிய நிலத்தை விற்றதாக தேவிஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத் தலைவர் தேவராஜு த/பெ பெரியசாமி நண்பனிடம் கூறினார். ஆலயம் வீற்றிருக்கும் நிலத்தை நில உரிமையாளர் இலவசமாக வழங்கி இருந்தாலும் அந்நிலம் வழிப்பாட்டு நிலமாக அரசு பதிவேட்டில் கையகப்படுத்தப் படாமல் இருந்து வந்ததைத் தொடர்ந்து அங்கு வெள்ளி ஆறு லட்சம் பொருட்செலவில் ஆலயத் திருப்பணி வேலைகளை மேற்கொள்வதற்கு பல்வேறு தடைகளை எதிர் நோக்கி வந்ததாக குறிப்பிட்ட அவர் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணும் வகையில் சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் சிவக்குமாரின் உதவியை நாடியதாக அவர் தெரிவித்தார். எங்களின் கோரிக்கையினை ஏற்று பல்வேறு வழிகளில் முயற்சியினை மேற்கொண்ட சிவக்குமார், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவின் ஒத்துழைப்புடன் இம்மாதம் 2ஆம் தேதியன்று இவ்வாலய நிலம் அரசு பதிவேட்டில் கையகப் படுத்தப்பட்டிருப்பதாக தங்களுக்கு கடிதம் கிடைத்தபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாக தேவராஜூ கூறினார். ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகளாக வழிபட்டு வந்த இவ்வாலய நிலத்தை அதிகாரப்பூர்வ நிலமாக பதிவு செய்வதற்கு பல வழிகளில் உதவியதுடன் ஆலய திருப்பணிக்காக வெ.60 ஆயிரம் வழங்கி உதவியுள்ள ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் மற்றும் இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட நகராண்மைக் கழக உறுப் பினர் சிவக்குமார், சிப்பாங் மாவட்ட நில அலுவலக அதிகாரிகள் அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் நன்றியினை பதிவு செய்வதாக தேவராஜு கூறினார். இவ்வாலய திருப்பணிக்கு நிதியுதவி அல்லது பொரு ளுதவி வழங்கிட ஆர்வமுள்ள நல்லுள்ளங்கள் 012-3609246 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்