img
img

ஒற்றுமையையும் தேசப்பற்றையும் இளையோர் மனதில் விதையுங்கள்.
வியாழன் 16 ஆகஸ்ட் 2018 12:25:35

img

(பார்த்திபன் நாகராஜன் / தி.க. காளிதாசன்) கோலாலம்பூர், 

ஒற்றுமையையும் தேசப்பற்றையும் இளையோர் மனதில் விதைக்க வேண்டும் என்று பெட்ரோனாஸின் தலைவர் டத்தோ அஹ்மட் நிஸாம் சாலே நேற்று கூறினார்.பல போராட்டங்கள், முயற்சிகளுக்கு மத்தியில் கடந்த கால தலைவர்கள் நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தனர். அவர்களை இன்னமும் நாம் சுதந்திர தந்தை என்று அழைத்து வருகிறோம்.

அதே வேளையில் இந்நாட்டில் மலாய், சீனர், இந்தியர் உட்பட பல இன மக்கள் ஒற்றுமையாகவும் எந்தவொரு பிரச்சினையும் இன்றி வாழ்ந்து வரு கின்றனர். ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்கும் மலேசியா போன்ற நாடு உலகின் எந்தவொரு நாட்டிலும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட நாட்டில் பிறந்ததற்கு அனைவரும் பெருமைப்பட வேண்டும்.

அவ்வகையில் நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை இன்றைய இளைய சமுதாயம் முழுமையாக உணர வேண்டும்.அதற்கு ஒவ்வோர் இளையோர் மனதிலும்  தேசப்பற்றை விதைக்க வேண்டும். அதோடு பல இன மக்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என வலியுறுத்தப்பட வேண்டும்.

இதன் மூலம் இந்த சுதந்திர மண்ணில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் பெருகும் என்று கேஎல்சிசியில் நடைபெற்ற சுதந்திர தின, மலேசிய தின சிறப்பு நிகழ்வில் டத்தோ அஹ்மட் நிஸாம் சாலே  மேற்கண்டவாறு பேசினார்.மலேசியாவில் பெட்ரோனாஸ் நிறுவனம் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு மக்களின் மகத்தான ஆதரவே முக்கிய காரணமாக உள்ளது.

மக்களின் ஆதரவிற்கு நன்றி கூறும் வகையில்தான் சமூக கடப்பாட்டின் அடிப்படையில் பல திட்டங்களை பெட்ரோனாஸ் மேற்கொண்டு வருகிறது. பெட்ரோனாஸின் கல்வி, மனிதவள மேம்பாட்டின் அடிப்படையில் 36,000 மலேசியர்கள் பயன் பெற்றுள்ளனர். இவர்கள் பெட்ரோனாஸ் கல்வி நிதியின் வாயிலாக 3.2 பில்லியன் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்று பல திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் பெட்ரோனாஸின் மக்கள் சேவையாகும். விரைவில் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. மேலும் அடுத்த மாதம் செப்டம்பர் 16ஆம் தேதி மலேசியா தினம் கொண்டாடப்படவுள்ளது.இவ்விரு தினத்தை கொண்டாடும் வகையில் தொலைக்காட்சி விளம்பர காணொளி பெட்ரோனாஸ் உருவாக்கியுள்ளது.

்நமது கதைீ எனும் தலைப்பில் இளையோரை கொண்டு இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. இக்காணொளி நிச்சயம் இளையோர் உட்பட மக்களின் மனதில் தேசப்பற்றை மேலும் வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக டத்தோ அஹ்மட் நிஸாம் சாலே கூறினார்.

இக்காணொளி நேற்று தொடங்கி பெட்ரோனாஸின் சமூக வலைத் தளங்களில் காட்சியிடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதியும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையிலும் தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பப்படும்.இதை தவிர்த்து கேஎல்சிசியில் உள்ள கெலேரியா பெட்ரோனாஸில் சுதந்திர தினம், மலேசியா தினத்தை முன்னிட்டு சிறப்பு கண்காட்சிகளும் இடம் பெறவுள்ளன.

்செரிதெரா கீதரீ எனும் தலைப்பிலான இக்கண்காட்சி வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதியில் இருந்து 30ஆம் தேதி வரை நடைபெறும்.ஆகவே பொதுமக்கள் இங்கு வந்து இக்கண்காட்சிகளை பார்த்து மகிழலாம் என்று டத்தோ அஹ்மட் நிஸாம் சாலே கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img