மலேசிய சங்கங்கள் பதிவிலாகாவின் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதால், கிள்ளான் தெப்பி சுங்கை செல்வ விநாயகர் ஆலய நடப்பு நிர்வாகச் செயலவையினரின் பதிவை தேசியப் பதிவிலாகா ரத்து செய்ததைத் தொடர்ந்து, அவ்வாலயத்தை யார் நிர்வகிப்பது என்ற சர்ச்சைக்கு இன்னும் முடிவு தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக ஆலயத் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் பர்தேஸ் முத்துவேலுவின் நிர்வாக முறைகேடு குறித்து பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பின் தேசியப் பதிவிலாகா பதிவை ரத்து செய் தது. இந்நடவடிக்கையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆலயத்தின் முக்கியக் கோப்புகள், தங்க ஆபரணங்கள், பணம் உள்ளிட்ட இதர பொருட்கள் மீதான பாதுகாப்பு கருதி அவ்வாலயத்தின் தற்காலிகச் செயலவைக் குழுவுக்குத் தலைமையேற்ற என்.பி.இராமன், தென்கிள்ளான் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தார். இதன் தொடர்பில், அன்றைய தினம் மாலை 4.00 மணியளவில் சம்பந்தப்பட்ட ஆலயத்தின் பக்க நுழைவாயிலின் வழியாக உள்ளே சென்ற போலீசாரும் தற்காலிகப் புதிய நிர்வாகத்தினரும் நடப்பு ஆலயத் தலைவர் பர்தேஸின் வருகைக்குக் காத்திருந்தனர். சுமார் அரை மணி நேரத்தில் அவர் அங்கு வந்த பின் இருதரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் போலீசார் தலைமையேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அச்சந்திப்புக்கிடையில், அரசாங்கத்தின் சார்பில் மேலிடத்து உத்தரவின்பேரில் வந்த ஒரு தொலைபேசி அழைப்புக்குப் பின், நடப்பு நிர்வாக நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என்றும் சிலாங்கூர் சொத்துப் பராமரிப்புப் இலாகாவின் ஆலோசனையின்படியும் முடிவின்படியும் அடுத்த கட்ட நடவடிக்கை அமையும் என்று போலீஸ் தரப்பு தெரிவித்து அச்சந்திப்பிலிருந்து நழுவியது. இதனைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். சம்பந்தப்பட்ட ஆலய நடப்பு நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஆலயத்தைப் பூட்ட வேண்டும் என்றும் சொத்துப் பராமரிப்பு இலாகா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்த போதிலும், நடப்புத் தலைவர் எதனையும் பொருட்படுத்தாமல் வழக்கம் போல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இப்போது இந்த ஆலயத்தில் என்ன இருக்கிறது, இல்லை என்ற நிலவரம் சம்பந்தப்பட்ட சொத்துப் பராமரிப்புப் பிரிவு உட்பட யாருக்கும் தெரியாத நிலையில் ஆலயம் இருப்பதாகவும் இராமன் தரப்பு தெரிவித்தது. இருப்பினும், சம்பந்தப்பட்ட விவ காரம் தொடர்பில் உடனடியாக மற்றொரு சந்திப்பை நடத்த அவ்விலாகா அழைப்பு விடுத்தி ருப்பதால், அதற்குப் பின்னரே இறுதி முடிவு தெரிய வரும், என்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்