img
img

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கினார் நரேந்திர மோடி
செவ்வாய் 28 ஏப்ரல் 2015 00:00:00

img
நிலநடுக்கத்தால் இந்தியாவின் வட மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது ஒருமாத சம்பளத்தை வழங்கினார். கடந்த சனிக்கிழமை நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 ஆகப் பதிவானது. இந்த மோசமான நில நடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், வட மாநிலங்களில் 72 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, பல்வேறு தரப்பில் இருந்தும் நிதியுதவிகள் குவிந்து வருகின்றது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தனது ஒரு மாத சம்பளத்தை, பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு, நன்கொடையாக வழங்கியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்கனவே தங்களின் ஒரு மாத ஊதியத்தை, நன்கொடையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த நில நடுக்கத்திற்கு நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000 ஐ தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பின்செல்

மாணவர் செய்திகள்

img
எஸ்.டி.பி.எம். தேர்வு:  தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.

அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா  

தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த

மேலும்
img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img