தமிழ் வாசகர்களின் அபரிமித ஆதரவை பெற்று, முதல் நிலை தமிழ் நாளேடு என்ற தனது அந்தஸ்தை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தற்காத்துக்கொண்டு வரும் வாசகர்களின் இதயக் குரலான ‘மலேசிய நண்பன்’ நாளிதழின் விற்பனையை வீழ்த்துவதற்காக பொறுப்பற்ற நபர்கள் சமூக வலைத்தளங்களின் வாயிலாக விஷமப்பிரசாரத்தை மேற்கொண்டு வருவது குறித்து மலேசிய நண்பன் வாசகர்கள் அறிவர்.
இத்தகைய விஷமப் பிரசாரமானது, மலேசிய நண்பனின் விற்பனையை வீழ்த்துவதற்கும் அது வாசகர்களுடன் கொண்டுள்ள ஆழமான தொடர்பை கீழறுப்பு செய்வதற்கும் நடத்தப்பட்டு வரும் சூழ்ச்சியாகும் என்பதை வாசகர்கள் அறியாமல் இல்லை.
மலேசிய நண்பனுடன் நேருக்கு நேர் மோதுவதற்கு தைரியம் இல்லாதவர்கள், அதன் வளர்ச்சியைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாதவர்கள், பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு, சமூக வலைத் தளங்களின் வாயிலாக விஷமப்பிரசாரத்தை பகிரச் செய்து, தங்களின் மன அரிப்பை தீர்த்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் மலேசிய நண்பனுக்கு எதிரான இந்த விஷமப் பிரசாரமானது, மிக அபத்தமானதாகும்; அப்பட்டமான பொய்யாகும். இது முட்டிக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் வேலையாகும்.
முதல் நிலை தமிழ் நாளேடு என்ற முறையில் மலேசிய நண்பனின் விற்பனை வளர்ச்சியை ஜீரணிக்க முடியாதவர்கள், அதற்கு எதிராக அவதூறு ஏற்படுத்தி, அதன் வாயிலாக குளிர்காயவும் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் கோணல் புத்தியுடன் கொல்லைப்புற வழியாக இந்த கைங்கரியத்தை புரிந்துள்ளனர். இந்த நாலாந்தர வேலையில் சக ஊடகங் களும் சம்பந்தப்பட்டுள்ளதாக அறியும்போது வேதனை அளிக்கிறது.
மலேசிய நண்பனை பொறுத்த வரையில் அது எப்போதுமே தனிப் பாதையையும் தனித்துவமான பார்வையையும் கொண்டு தனது பயணத்தை தொடர்ந்து முன்னெ டுத்து வருகிறதே தவிர அது யாரையும் சார்ந்து இருந்ததும் இல்லை; அதற்கான அவசியமும் இல்லை. காரணம், மலேசிய நண்பனின் ‘எஜமானர்’ என்பவர் கள் அதனை ஒவ்வொரு நாளும் காசு கொடுத்து வாங்கி படிக்கும் அன்பு வாசகர் கள்தான். அவர்களின் கரங்களை நம்பித்தான் மலேசிய நண்பன் பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
மலேசிய நண்பனின் போராட்டம் என்பது சமுதாயத்திற்காக அது நடத்தும் போராட்டமாகும்.
சமுதாயம் நலம் சார்ந்த - எண்ணற்ற விவகாரங்களில், சமுதாயத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சமுதாயப்பிரச்சினைகளையும் மக்கள் அவலங்களையும் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் சவால்களையும் அலசி ஆராய்ந்து மிகச் துணிச்சலுடன் முன்னெடுத்து வருகிறது என்பதை வாசகர்கள் அறியாமல் இல்லை. சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளையும் அவர்களின் எண்ணத் தாபங்களையும் நிறைவேற்றுவதையே மலேசிய நண்பன் ஒரு வேள்வியாக கொண்டுள்ளது.
இந்நிலையில் மலேசிய நண்பனுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டு வரும் இத்தகைய விஷமப்பிரசாரங்கள் எங்கிருந்து புறப்பட்டு நகர் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்பதை மலேசிய நண்பன் நிர்வாகம் அறியும். எந்த நோக்கத்திற்காக அவர்கள் இவற்றை செய்கின்றனர் என்பதும் தெரியும். இது தொடர்பாக காவல் துறையில் புகாரும் செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக, உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கடந்த காலங்களிலும் மலேசிய நண்பனுக்கு எதிராக தீயநோக்குடனான விஷமப் பிரசாரங்கள் பரப்பப்பட்டன. ஆனால், வாசகர்களின் ஆதரவுடனும் அரவணைப்போடும் அவற்றை நிர்வாகம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
எனவே ஆழ்ந்த பார்வையும் நோக்கும் கொண்டு, ஒரே வரியில் ஓராயிரம் விவகாரத்தை முன்னெடுக்கும் மலேசிய நண்பனின் போராட்டம் ஓயாது. வாசகர்களின் வற்றாத ஆதரவும் மாறாத அன்பும் இருக்கும் வரை அதன் வெற்றிப் பயணம் தொடரும். எந்த வகையான அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் ஒருபோதும் அஞ்சாது என்பதை வாசகர்களுக்கு உறுதி கூறுகிறோம். மலேசிய நண்பன் எனும் இந்த தமிழ் ஏடு தொடர்ந்து பீடு நடைபோடுவதற்கு அதனை தற்காக்கும் அரணாக வாசகர்கள் விளங்குவார்கள் என்று நம்புகிறோம்.
இப்படிக்கு
மலேசிய நண்பன் நிர்வாகம்
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்