(சுப்ரா) காஜாங்,
பாங்கியிலுள்ள மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர் கல்விக்கூடங்களுக்கு இடையிலான அரச விருதிற்கான மலாய் மொழிப் பேச்சுப் போட்டியில் புத்ரா பல்கலைக்கழக மாணவர்கள் முதலாவது தேர்வு பெற்று வெற்றி பெற்றனர். இவ்வேளையில் புத்ரா பல்கலைக்க ழகத்தின் இறுதி ஆண்டு மாணவியான பவித்ரா இவ்வாண்டிற்கான சிறந்த பேச்சுப் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு ரொக்கப் பரிசினையும் கேட யத்தையும் வெற்றி கொண்டார்.
புத்ரா பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்த மாணவர்களான பவித்ரா, இஸாத்தி, ரஷிடா, ஹஸ் உமைரா ஆகிய நான்கு மாணவிகள் இப்போட்டியின் இறு திச் சுற்றில் மலேசிய தேசிய பல்கலைக்கழக மாணவர்களோடு மோதினர். இதில் புத்ரா பல்கலைக்கழக மாணவர்கள் திறமையாக பேசி வெற்றி யாளர்களாக அறிவிக்கப்பட்டு மூவாயிரம் வெள்ளி ரொக்கம், கேடயம், சுழல் கேட யம் ஆகியவற்றை வெற்றி கொண்டனர்.
இதன் இறுதிச்சுற்றில் மிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா சிறந்த பேச்சாளராக தேர்வு பெற்று ஐந்நூறு வெள்ளி ரொக்கத்தையும் தட்டிச் சென்றார். இதற்கு முன்பு இம்மாணவி உயர் கல்விக் கூடங்கள் ஏற்பாடு செய்திருந்த பல பேச்சுப் போட்டிகளில் இறுதிச் சுற்று வரை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை, தான் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றதோடு சிறந்த பேச்சாளராக தேர்வு பெற்றிருப்பதாக பவித்ரா கூறினார். தம்மோடு கலந்துகொண்ட இதர மூவரும் மிகத்திறமையாக பேசியது தங்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றதாக பவித்ரா தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்