ஜொகூர் பாரு மாநகர் மன்ற தனியார் குடியிருப்புப் பகுதியில் உள்ள பலகை வீடுகளில் வசிக்கும் இந்திய குடும்பங்கள் மிகவும் பரிதாபமான நிலையில் வாழ்கின்றனர். சுற்றுச் சூழல் மிக அசுத்தமாக இருப்பதால் குறிப்பாக அங்குள்ள தனித்து வாழும் தாய் மார்கள் ஆஸ்துமா, கால் வீக்கம், கழுத்து வீக்கம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதை நேரில் சென்ற போது பார்க்க நேரிட்டது. இங்கு ஜாலான் துன் அப்துல் ரசாக், சூசோர் 1, எண் 146 இல் வசிக்கும் தனித்து வாழும் தாயான பி.மாரியம்மா (வயது 60) என்பவரின் பலகை வீடு எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. மழை பெய்தால் வீட்டிற்குள் மேல் கூரையிலிருந்து மழை நீர் கொட்டி வீட்டிலுள்ள அனைத்து பொருட்களும் சேதம் அடைந்து விடுவதாக அவர் சொன்னார். மழை நீரை சேமித்து குளிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தி வந்ததால் கால், கை வீக்கம் ஏற்பட்டு அவதியுற்றுவதாக அவர் கூறினார். தற்போது எந்த வேலையும் செய்ய முடியாமல் போகவே சமூக நல இலாகாவின் உதவியை நாடிப்போனால் விரட்டியடிக்கப் படுவதாக பி.மாரியம்மா கூறினார். இனிமேல் நான் யாரை தேடிப் போவது என்று கூறிய அவர் எனது உயிரை மாய்த்துக் கொள்வதே மேல் என்று அவர் கண்கலங்கியவாறு சொன்னார். இவர் இப்படி என்றால் இவரது வீட்டின் முன் புறம் குடியிருப்பும் தர்மராஸ் உத்திராபதி (வயது 46) என்பவர் வாடகை அறையொன்றில் அப்பகுதியில் தங்கிவருவதாகவும் நீரிழிவு நோயால் இரண்டு பாதங்களில் பாதி வெட்டப்பட்டு நடக்க முடியாமல் திண்டாடுவதாகவும் கூறினார். சிங்கப்பூரில் பிறந்த இவர், இங்கு நடுத்தர வாசியாக உள்ளார். பாதுகாவலர் வேலை செய்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகின்றது. சில வேளைகளில் வெறும் காப்பி மட்டுமே இவருக்கு உணவு. எம்.பொன்னம்மா என்பவர் வசிக்கும் வாடகை அறை வீட்டில் ஒரு ஆஸ்துமா நோயாளியான தனித்து வாழும் தாயான எம்.சுகுந்தமலரும் (வயது 35) தங்கி வருகிறார். மூன்று பிள்ளைகளுக்கு தாயான அவரது கணவர் விட்டு விட்டு சென்று விட்டதாக அவர் சொன்னார். இவரும் நோயின் காரணமாக வேலை ஏதும் இல்லாமல் தவித்த வண்ணம் உள்ளார். இவர்களுடன் சேர்ந்து மற்றொரு நோயாளியான எஸ்.கோமதன் (வயது 30) தங்கி வருகிறார். இவருக்கு அடிக்கடி தலை சுற்றல் ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்து விடுவார். இவரும் கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் இருந்து வருகிறார். வேலை கிடைத்தாலும் வேலைக்குச் செல்வதற்கு உடம்பு ஒத்து வரவில்லை என அவர் சொன்னார். இங்கு வசிக்கும் மேலும் ஒரு தனித்து வாழும் தாயான கோகிலம் (வயது 46) என்பவர் முன்பு சிங்கப்பூரில் நல்ல சம்பளத்துடன் வேலை பார்த்து வந்ததாகவும் இருதய நோயால் அவதிப்பட்டதால் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டதாக அவர் சொன்னார். அவரது அருகில் குடியிருக்கும் கோமதன், மாரியம்மா, பொன்னம்மாள், தர்மாஸ், சுகுந்தமலர் ஆகியோருக்கு முடிந்த உதவிகளை செய்து வருகிறார். எனது சேமிப்பு இருக்கும் வரை அவர்களுக்கு உதவி செய்வது கடமையாக கருதுவதாக இருதய நோயாளியான கோகிலம் கூறினார். தர்மராஸை தவிர மற்றவர்கள் அனைவரும் பதிவுபெற்ற வாக்காளர்கள், இவர்களுக்கு சமூக நல உதவி கிடைப்பதற்கு ம.இ.கா. மட்டும் அல்ல, அரசு சாரா இயக்கம் இதர அரசியல் கட்சிகளும் பாராமுகம் காட்டி வருகின்றன. இதேப் பகுதியில் வாடகை அறையில் வசித்து வரும் மற்றொரு தனித்துவாழும் தாயான எம்.பொன்னம்மாள் (வயது 45) கழுத்து வலியாலும் தொண்டை வலியாலும் வருடக்கணக்கில் சிரமப்பட்டு வருகிறார். தனது வீட்டுப்பகுதியின் தூய்மை கேட்டினால். அடிக்கடி காய்ச்சலும் தலை சுற்றலும் ஏற்படுவதாக சொன்னார். ம.இ.கா.வுக்குச் சென்று உதவி கேட்டால் நீங்கள் எல்லாம் நல்லா இருக்கிறீர்கள். உங்களுக்கு ஏன் உதவி என்று சொல்லி விரட்டி விடுகின்றனர் என்று எம்.பொன்னம்மாள் கூறினார். இவர் குத்தகை அடிப்படையில் பாது காவலர் வேலை செய்தார். ஆனால் சம்பளம் கிடைக்கவில்லை என்றார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்