img
img

இன்றைய ஜெயலலிதா நிலையில் அன்று எம்ஜிஆர்..
திங்கள் 10 அக்டோபர் 2016 12:49:52

img

சென்னை: முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பொறுப்பு முதல்வர் வேண்டாம் என்று அதிமுக கூறிவந்தாலும், எம்ஜிஆர் இதேபோன்று சிகிச்சை பெற்ற காலத்தில் வேறு மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டது கவனிக்கப்பட வேண்டியது. முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆர், 1984ம் ஆண்டு, இதே அக்டோபர் மாதம், இதேபோன்று சென்னை அப்பல்லோவில் உடல் நலக்குறைவால் அட்மிட் செய்யப்பட்டார். நீண்ட நாட்கள் அவர் சிகிச்சை பெற வேண்டும் என்று அப்பல்லோ அறிக்கை வெளியானதும், அப்போதைய ஆளுநர் காட்சிக்குள் காலடி எடுத்து வைத்தார். ஆட்சி நிர்வாகம் ஸ்தம்பித்துவிடக்கூடாது என்பதற்காக, ஆளுநர் எஸ்.எல்.குரானா உடனடியாக மூத்த அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். எம்ஜிஆர் அப்போது சுய நினைவில் இல்லை என்பதால் அவருக்கு பதிலாக யாரை பொறுப்பாளராக நியமிப்பது என்பதை அவரிடமே கேட்க முடியாத நிலை இருந்தது. வாய் மொழி உத்தரவு ஆனால், மூத்த அமைச்சர் நெடுஞ்செழியனோ, தன்னை நிர்வாக பொறுப்பேற்று நடத்துமாறு எம்ஜிஆர் வாய் மொழியாக கூறியிருந்ததாக தெரிவித்தார். ஆனால், அதற்கு ஆதாரம் இல்லாததால், ஆளுநர் என்ன செய்யலாம் என சட்ட வல்லுநர்களிடம் யோசனை கேட்டார். சட்ட ஆலோசனை முதல்வர் பணி செய்ய முடியாத காலங்களில் அமைச்சர்களில் ஒருவர் அரசை வழி நடத்தலாம் என அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளதாகவும், ஆனால், எழுத்துப்பூர்வமாக முதல்வர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று அரசியல் சாசனம் தெளிவாக வரையறுக்கவில்லை என்பதால், வாய் மொழி உத்தரவையும் செயல்படுத்தலாம் எனவும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். நெடுஞ்செழியன் தலைமை இதையடுத்து நெடுஞ்செழியன் தலைமையில் மூத்த அமைச்சர்கள் குழு, ஆட்சி நிர்வாகத்தை வழி நடத்த ஆளுநர் அனுமதியளித்தார். அதே நேரம், தலைமைச் செயலாளரிடம் எழுத்துவடிவில் வாங்கிக்கொண்டு அனுமதி கொடுத்தார் ஆளுநர். கொள்கை முடிவுகளை மாற்றியமைக்கவோ, புதிதாக அறிவிக்கவோ கூடாது என ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார். எம்ஜிஆர் அமெரிக்கா ப்ரூக்ளின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக பொறுப்பு வகித்தது வரலாறு. ஆளுநர் பணி முக்கியமானது இதேபோன்ற ஒரு சூழ்நிலை, அதே போன்றதொரு மாதத்தில், அதே கட்சியின் தலைமைக்கு மற்றும் மாநில முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஆளுநரின் வழிகாட்டுதல் மிக முக்கியமானது. எனவே, ஆளுநர் எடுக்கும் முடிவுகளை அரசியல் கண்ணோட்டத்துடன் கொண்டு சென்று, தமிழக ஆட்சி நிர்வாகத்தை ஸ்தம்பிக்க செய்துவிடக்கூடாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். இப்போதுதான் சேவை தேவை எம்ஜிஆர் காலத்திலாவது நெடுஞ்செழியன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், முதல்வர் இல்லாத நேரத்திலும் ஆட்சியை கொண்டு செல்லும் திறமைசாலிகளாக வார்த்து வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இப்போதுள்ள அரசில், அனைத்து முடிவுகளும் ஜெயலலிதாவே எடுத்து பழக்கப்படுத்தப்பட்டுள்ளதால், எம்ஜிஆர் காலத்தைவிட இப்போதுதான் ஆளுநரின் பங்களிப்பு அதிகம் தேவைப்படும் என்கிறார்கள் விவரம் அறிந்தோர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img